பக்கம்:மாபாரதம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மாபாரதம்


“என்னை யான் இங்குக் காத்துக் கொள்ளும் விறல் என்னிடம் உள்ளது. நீ இங்கு வந்து எனக்கு வாய்த்தது அவமானம்” என்றான்.

“காத்தலும் என் தொழில்தான்” என்றான் சிவன். “அழித்தலும் காத்தலும் நீயே செய்வதாக இருந்தால் இறைவன் எதற்கு” என்று கேட்டான் சிறுவன், “பொறுப்பை இறைவனிடம் தள்ளிவிட்டு இம்மானுடர் கடமையாற்றுவதின்று தப்பித்துக் கொள்கின்றனர்” என்றான் இறைவன்.

சொற்போர் மற்போரிலும் விற்போரிலும் கொண்டு சென்றது. மல்யுத்தத்தில் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு புரண்டனர். விட்டுகொடுக்காமல் துவண்டனர்.

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன் பாண்டியன் பிரம்படி பட்ட அவ்வடு பார் முழுதும் பட்டது. அதே போன்ற நிலையில் அருச்சுனன் வில் அம்பால் இறைவனுக்கு ஏற் பட்ட தழும்பு உயிர்கள் அனைத்துக்கும் பதிந்தது.

அதற்குமேல் நாடகத்தை நீடிக்க விரும்பவில்லை. பார்வதியோடு பரமசிவன் தெய்வக் கோலத்தில் காட்சி தத்து “வேண்டுவது யாது?” என்று கேட்டான்.

“பாசுபத அத்திரம்” என்றான்.

“பத்திரமாக வைத்திருக்கிறேன் யாருக்குப் கொடுப்பதில்லை. துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.” என்றான்.

“தருமம் காக்கவே அது பயன்படும்” என்று சொல்லி இறைவனிடம் அதைக் கேட்டுப் பெற்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/139&oldid=1048196" இலிருந்து மீள்விக்கப்பட்டது