பக்கம்:மாபாரதம்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராசீ

11


தேவையானைக்கு உற்ற தோழி ஒருத்தி இருந்தாள். விடபன்மன் என்னும் அசுரனின் மகள் அவள்; சன்மிட்டை என்பது அவள் பெயர். அவள் அடிக்கடி அங்கு வந்து போய்க்கொண்டிருந்தாள்; மணமாகாதவள், இவனோடு மகிழ விரும்பினாள். இது கள்ளக்காதலாகக் கனிந்தது; உள்ளம் கலந்து அவர்கள் உறவு கொண்டனர், பூரு என்னும் புண்ணியப் புதல்வன் ஒருவன் பிறந்தான். அச்சில் வார்த்த பொம்மைகள் என அடுத்து அடுத்து இருவரைப் பயந்தாள். அம்மூவருக்கும் மூல அச்சு யயாதி தான் என்பதை உருவ ஒப்புமை கொண்டு கட்டியமனைவி கண்டுகொண்டாள்.

அவள் தன் தந்தையிடம் அவன் செய்த தவறுகுறித்து அவதூறு கூறினாள். வாலிபக் கிறுக்கால் அவன் விளையாடியதை அறிந்து அவனை முதியவன் ஆகுக என்று சபித்துக் கோபித்தான். ஆசைகள் அறுமுன் நாற்பதைக் கடந்து நூற்றினை அவன் எட்டிப்பிடித்தான். உடல் நூறு வயது ஆகியது; உள்ளம் துள்ளி விளையாடியது. ஒருத்திக்கு இரண்டு மனைவியர் இருந்தும் மூப்பு அவனை யாப்பிட்டது; எண்ணிப்பார்த்தான், வயதில் சிறிய வாலிப மைந்தர்களைப் பார்த்து இளமையை இரவல் கேட்டான். மூத்தவன் மட்டும் பாசத்தின் பிணைப்பால் இளமையைப் பரிமாறிக் கொண்டான். யயாதி சிற்றின்ப வாழ்க்கையில் எஞ்சி நின்ற அரைகுறை இன்பத்தை அழகியர் கொண்டு அனுபவித்தான். அவனுக்கு அதில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்தான்; முதுமையைத் தான் திருப்பிப் பெற்றுக்கொண்டு தவ வாழ்க்கையில் தலைவைத்தான்.

மகன் பூரு என்பவனுக்கு மணிமுடி சூட்டி அவனைப் பார் ஆள வைத்தான். அவன் தியாகத்தைப் பாராட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/14&oldid=1239404" இலிருந்து மீள்விக்கப்பட்டது