பக்கம்:மாபாரதம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

141


“சின்ன பூ” என்றாள்.

“பூ இவ்வளவுதானே அது எங்கிருந்தாலும் பறித்துக் கொண்டு வருவேன்” என்று உறுதியாகக் கூறினான்.

உரோமசன முனிவன் எதிரே வந்தான்.

“எங்கே போகிறாய்?” என்று கேட்டான்!

“பூக்கடைக்கு” என்றான்.

“அதற்கு இந்த வழியாகாதே” என்றான்.

“திரொபதி ஆசைப்பட்டாள்; இந்தத் தாமரைப் பூ எங்குக் கிடைக்கும்?” என்றான்.

“இந்திரன் உலகில் இருக்கிறது; அது தவறினால் குபேர பட்டணத்தில்தான் இருக்கிறது” என்றான்.

“இந்திரன் உலகத்துக்கு என் தம்பி போய் இருக்கிறான். அவனிடம் சொல்லி இருக்கலாம். இப்பொழுது செல்ல முடியாது. என்ன செய்யலாம்?”

“குபேரன் ஊருக்குப்போ, கிடைக்கும்” என்றான். போகும்வழி சொல்லி அனுப்பினான்.

ஒரே மூச்சில் கொண்டு வருவது என்று புறப்பட்டான்; மலை, ஆறு குன்று, மற்றும் பள்ளம், மேடு, முள் எல்லாம் கடந்து நடந்து சென்றான். அய்யப்பன் பக்தர்களைப் போன்ற பிடிவாதம்.

வழியில் ஒரு முதிய குரங்கைப் பார்த்தான்.

இவன் இராமாயணம் படித்து இருக்கிறான். நக ரத்தில் இருந்தபோது சாத்திரிகள் இராத்திரி வேளைகளில் நிகழ்த்தும் கதைகள் கேட்டு இருக்கிறான். அம் முதியவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/144&oldid=1048199" இலிருந்து மீள்விக்கப்பட்டது