பக்கம்:மாபாரதம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மாபாரதம்

வாயு பகவானின் மகன் அனுமன் என்பதும் தெரியும்; தன் தந்தைதான் அவனுக்கும் தந்தை என்பதால் அவனைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

“அண்ணா” என்று அவனைக் கட்டிக் கொண்டான்.

அனுமனுக்கு ஆச்சிரியமாக இருந்தது. இப்படி ஒரு தடியன் தனக்குத் தம்பியாக எப்படி இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டான்.

பிறகு தெரிந்து கொண்டான். அவன் தருமனின் தம்பி வீமன் என்று.

“நீ எப்படி இன்னும் உயிர் வாழ்கிறாய்?” என்று வீமன் கேட்டான். “தெரியாமல் நான் சீதையிடம் ரொம்பவும் நல்லவனாக நடந்து கொண்டேன். அவள் உயிரைக் காப்பாற்றினேன். அதனால் நீ சிரஞ்சீவியாக இரு” என்று வாழ்த்தி விட்டாள். நான் ‘வெட்டு வெட்டு’ என்று உலகத்துக்குச் சுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்” என்றான்.

“நீண்ட காலமாக வாழ்லது கூடவா தவறு?”

உனக்குத் தெரியாது. என்னைப்போலத்தான் நீயும்; கிழக் கட்டைகளைக் கேட்டுப் பார்; சாவு எவ்வளவு இனிமையானது என்று சொல்வார்கள்” என்றான்.

“சிலர் சுருசுருப்பாக இருக்கிறார்களே” என்றான்.

வாழ்க்கையில் உந்துதல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுருசுருப்பாக இருக்க முடியும்” என்றான்.

“அப்படியானால் எங்கள் போராட்டத்தில் நீ பங்கு கொள்ள முடியுமா?” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/145&oldid=1048200" இலிருந்து மீள்விக்கப்பட்டது