பக்கம்:மாபாரதம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மாபாரதம்

என்று பெண்களுக்கு இதனால் தான் பெயர் வந்ததோ தெரியவில்லை.

சடாசுரன் வதை

திரெளபதி வீட்டோடு இருக்கக்கூடாதா? அவள் தனியாக ஏன் போக வேண்டும்?

இந்தக் காலத்தைப் போலத்தான் அந்தக்காலமும் பெண்பிள்ளை தனியே போகக்கூடாது. போகமுடியாது. அவன் தனியாகச் சென்றாள். அவளுக்கு ஒர் அசுரன் நிழலானான். அவன் பெயர் சடாசுரன் என்பது.

“பெண்ணே நீ எங்கே போகிறாய்?”

“சொல்லித்தான் ஆகவேண்டுமோ?” என்று கேட்டாள்.

அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் வளையல் அரற்றியது; எனினும் அவன் விடுவதாக இல்லை

காற்று வாங்க நகுலனும் சகாதேவனும் அந்தப்பக்கம் சென்றனர். ஆறாவது ஆள் இவன் யார் என்ற வினா எழுந்தது. அதற்குப்பிறகு அவன் அசுரன் என்பது அறிந்து அவன்மீது பாய்ந்தனர். அவன் இவர்களை இரண்டு கைகளி லும்வைத்துச் சுழற்றினான். வீமன் தம்பியரைத் தேடி வந்த போது இந்த வம்பினைக் கண்டான். தும்பி என அவன் மீது பாய்ந்து சராசந்தன், பகன் சென்ற பாதைக்கு வழிக் கூட்டினான்.

“காலம்கெட்டு விட்டது, பெண்கள் தனிவழியே போக இயலாது. பாரதப் பண்பாடு இது” என்று கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/147&oldid=1048202" இலிருந்து மீள்விக்கப்பட்டது