பக்கம்:மாபாரதம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

147


அது கண்ணனிடம் பலிக்கவில்லை. துர்வாசரும் துரியன் சொல்லியதைக் கூறி அவன் தீய எண்ணத்தை விளக்கினார்.

அவன் சொன்னாலும் இவர் வந்திருக்கக்கூடாது. அவன் வரம் என்று கேட்டு விட்டதால் மறுக்க முடியாமல் போய்விட்டது.

அவர் மூக்கில் கரி பூசிக் கொண்டார். “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

“கேட்பார் பேச்சுக்கேட்டு சுயநினைவு இழக்காமல் இருக்க வேண்டும்” என்றனர்.

அவருக்கு அறிவு வந்தது.

ஒட்டு மாம் பழம்

அங்கே செடியில் மாங்கனி திரெளபதியின் கன்னத்தைப் போலச் சிவந்துகாணப் பட்டது. “என்ன வேண்டும்” என்றான் அருச்சுனன்; “தின்ன அப்பழம் வேண்டும்” என்றாள். பறித்துக் கொடுத்தான்; பழம் கைக்குவந்தது. அதற்குப் பின்னர் தெரிந்தது; அது அங்குத் தவம் செய்யும் ஒரு முனிவருக்கு உரியது என்று.

“பழங்களைப் பறிக்காதீர்” என்று எழுதி அங்கு ஒட்டப்பட்டிருந்தது. பழத்தைப் பறித்துவிட்டோமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/150&oldid=1048205" இலிருந்து மீள்விக்கப்பட்டது