பக்கம்:மாபாரதம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசி

149


நச்சுப் பொய்கையில் அடைந்த கலிவு

அங்கு வனத்தில் ஒரு நச்சுப் பொய்கை இருந்தது. அதுஉயிர் வாங்கும் என்று பாண்டவர்களுக்குத்தெரியாது. அந்தணச் சிறுவன் ஒருவன் பூணுரலில் சக்கி முக்கிக் கல்லை அணிந்திருந்தான். மான் ஒன்று அக்கல்லைப் பூணுரலோடு இழுத்துக் கொண்டு ஒடிவிட்டது. அவன் “குய்யோ முறையோ என்று கத்தினான்; ஐயோ பாவம்” என்று இரக்கம் காட்டி அதைத்துரத்திப்பிடிக்கத் தருமன் நீங்கலாக நால்வரும் சென்றனர். அதைப்பிடித்து, அந்நூலைக் கொணர முயன்றனர். அதற்குள் அலுத்து விட்டனர்.

நீர் குடிக்கலாம் என்று அங்கு இருந்த பொய்கைக்குப் போயினர்; நீர் குடித்தனர்; அவ்வளவுதான்: நீட்டிவிட்டார்கள். இதற்குள் துரியன் இவர்களை அழிக்க ஒரு ஏற்பாடு செய்திருந்தான்; முனிவன் ஒருவனிடம் சொல்லி துஷ்ட தேவதைக்குப் பூஜை செய்யச் சொல்லி இருந்தான் அந்த முனிவன் ஒரு வேள்வி செய்து ஒரு கொடிய பூதத்தை உண்டாக்கி அதனை ஏ வினான்; அது அவர்களைக் கொல்லச் சென்றபோது வழியில் பிணங்கள் தடுக்கிக் கீழே விழுந்தது; அதற்குக் கோபம் வந்து விட்டது.

“பிணத்தைக் கொன்று தின்ன ஏவினான்” என்று தவறாக நினைத்து ஏவிய அவன் மீதே பாய்ந்தது. அம் முனிவனைக் கொன்று அவனையே விழுங்கி விட்டது. கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு அம்முனிவன் வாழ்க்கை உதாரணமாக அமைந்தது; இது இக்கதையின் முற்பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/152&oldid=1037946" இலிருந்து மீள்விக்கப்பட்டது