பக்கம்:மாபாரதம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மாபாரதம்


அதற்குப் பிறகு தருமன் எமனுடன் வாதாடி இறந்தவர் உயிரைத் திரும்பப் பெற்றான். அது ஒர் சுவாரசியமான சம்பவமாகும். “இறந்தவர் நால்வரில் யாராவது ஒருவரை மட்டும் உயிரோடு பெறலாம். யாரை விரும்புகிறாய்” என்று அசரீரி வடிவில் இயமன் கேட்டான்.

“சகாதேவனை” என்றான் தருமன்.

“ஏன்? எதற்கு?” என்றது அசரீரி.

“குந்திக்கு மூவர் பிள்ளைகள்; மாத்திரிக்கு இருவர்; நகுலனுக்குச் சகோதரன் ஒருவன். எனக்குச் சகோதரர்கள் இருவர். இருவர் போனாலும் ஒருவன் இருப்பேன்; கவலை இல்லை; மாத்திரியின் புதல்வர்கள் இருவரில் ஒருவனாவது உயிர்வாழ வேண்டும்” என்று விளக்கம் தந்தான்.

“வீமனும் அருச்சுனனும் இல்லாமல நீர் எப்படி வெற்றி பெறுவீர்” என்று கேட்டது.

“தருமம்; தருமம் எனக்குத் துணை நிற்கும்” என்றான்.

மேலும் தருமனை நோக்கி உயிர் கவரும் அறக் காவலன் ஆகிய இயமன் அசரீரி வடிவில் சில வினாக்களைக் கேட்டான். அதற்குத் தருமன் தந்த விடைகள் அத்தெய்வத்தைக் கவர்ந்தது.

“சொல்லுக; நூல்களில் பெரியது எது?”

“சுருதி”

“இல்லறம் சிறப்பு அடைவதற்கு உதவுவது?”

“மனைக்குத் தக்க மனைவி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/153&oldid=1038322" இலிருந்து மீள்விக்கப்பட்டது