பக்கம்:மாபாரதம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

151


“மணம் மிக்க மலர்?”

“சாதிப் பூவினால் கட்டப்பட்ட மாலை”

“முனிவர் குலம் தொழும் கடவுள் யார்?”

“முகுந்தன்”

“மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை எது?”

“நாணம்”

“இனியது எது?”

“மழலை மொழி”

“நிலைத்து இருப்பது?”

“நீடு புகழ்”

“கற்பது?”

“கசடறக் கற்றலாகிய கல்வி”

“அற்பமாவது எது?”

“பிறர் கையேந்தி நிற்றல்”

இவ்விடைகளைக் கேட்டு இயமன் தருமனைப் பாராட்டினான்.

நால்வரையும் எழுப்பித் தருமனோடு அனுப்பி வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/154&oldid=1048207" இலிருந்து மீள்விக்கப்பட்டது