பக்கம்:மாபாரதம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

மாபாரதம்


துரியனின் அவலம்

காட்டில் இருந்த பாண்டவர்க்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்று துரியன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பாடி வீடு அமைத்துப் படையுடன் தங்கி இருந்தான்.

அங்கே சித்திரசேனன் என்ற கந்தருவன் இவர்களைச் சந்தித்தான். துரியன் அவர்களைச் சாதாரண மானுடன் என்று தூக்கி எறிந்து பேசினான்.

கந்தருவனுக்கும் துரியோதனன் படையினருக்கும் போர் மூண்டது; துரியோதனாதியர் தோற்றுப் புறம் கண்டனர். கன்னன், துச்சாதனன், சகுனி அனைவரும் பின் நோக்கி ஓடினர். துரியன் மட்டும் ஓடாமல் நின்றான்.

கந்தருவர் அவனைத் தேரில் கட்டி இழுத்துச் சென்றனர்.

கன்னனோ மற்றவர்களோ அவனை மீட்க முன் வர வில்லை.

அவன் அபயக்குரல் கேட்டுத் தருமன் வீமனைச் சென்று தடுக்கச் சொன்னான். அவன் முதலில் தயங்கினான்.

“பகை வேறு; பண்பாடு வேறு; அபயம் என்று குரல் கொடுப்பவரைக் காப்பது மனித தர்மம்; அதை முதலில் செய்க” என்று தம்பியரை நோக்கிக் கூறினான்.

உடனே வீமனும் விசயனும் செயல்பட்டு அவனை மீட்டுக் கொண்டு வந்தனர். ஆபத்தில் உதவினவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/155&oldid=1048208" இலிருந்து மீள்விக்கப்பட்டது