பக்கம்:மாபாரதம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

153

என்ற நன்றியை அக்கயவன் மறந்துவிட்டான். பகைவ னுக்கும் அருள் செய்யும் பண்பு பாண்டவரிடம் வெளிப் பட்டது. அவன் தான் தப்பித்ததைவிட அவர்கள் காப் பாற்றியதால் அது தனக்கு ஏற்பட்ட அவமானம் எனக் கருதினான். அதுவே அவன் அவர் மாட்டுக் கொண்ட பகையை மேலும் தூண்டியது.

5. மறைந்து வாழ்தல்

பன்னிரண்டு வருஷம் காட்டில் எப்படி எப்படியோ வாழ்ந்து முடித்தனர்; கிடைத்ததை உண்டு மனநிறைவு கொண்டு ஒருவாறு வாழ்க்கை நடத்தினர். இன்னும் ஒரு வருஷம் துரியோதனாதியர் கண்களுக்குப்படாமல் வாழ வேண்டும் என்று விதித்திருந்தனர். மச்ச நாட்டில் விராடனின் ஊர் அச்சமின்றி வாழத் தகுந்த இடம் என்று முடிவு செய்தனர்.

விராடனின் ஊருக்குள் நுழைவதற்கு முன் புறங்காட்டில் ஒரு காளி கோயில்; அங்கு ஒரு வன்னிமரம். அதன் பொந்தில் பாண்டவர் தமக்கு உரிய படைக் கருவிகளைப் பத்திரப்படுத்தி வைத்தனர். பதுக்கி வைக்கும் தொழிலி லும் அவர்கள் கை தேர்ந்தவராக விளங்கினர்.

தருமன் கங்கன் என்ற பெயரோடு அந்நகரில் தங்கி னான். துறவுக் கோலத்தில் தெய்வீக மனிதராக நடந்து கொண்டான். அவனை அரசன் எதையும்கேட்டு நடக்கும் அறிவுடைய ஆன்றோனாக அமர்த்திக் கொண்டான். வீமன் சமையல் வேலை கற்றவனாக இருந்தான், உண்ணத் தெரிந்தவன்; அதைப் பண்ணவும் தெரிந்து வைத்திருந் தான். நளன் என்னும் அரசனும் அரசு துறந்த நாளில் மற்றோர் நாட்டில் சமையல் தொழில்தான் ஏற்றான். அது போல் இவன் சமையல்கட்டிலைக் குத்தகை எடுத்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/156&oldid=1038340" இலிருந்து மீள்விக்கப்பட்டது