பக்கம்:மாபாரதம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

155


கீசகன் வதை

வண்ணமகள் வடிவில் இருந்தபோது திரெளபதியின் பெயர் விர தசாரணி. கந்தருவன் ஒருவன் தன் காதலன் என்றும், அவ்வப்பொழுது வந்து சந்திப்பதுண்டு என்றும் அரசியிடம் சொல்லி வைத்தாள்.

அவள் கணவனோடு இருக்கும் கவின்மிக்க வாழ்க் கையை யாரும் காண முடிந்ததில்லை. என்ன இருந்தாலும் அந்தப்புரத்து எடுபிடி தானே.

அங்கு வந்த அரசியின் அருமைத்தம்பி கீசகன் அழகி ஒருத்தி சேவகியாக இருப்பது அவன் கருத்தைக்கவர்ந்தது. அவளை அவன் ஒரம் கட்டினான். அவனோடு அவள் சோரம் போவதற்கு இசைவாள் என்று எதிர்பார்த்தான்.

அதற்காகத் தன் உடன் பிறந்த தமக்கையைச் சாரமாக அமைத்தான். அவன் சார்பில் அவளைப் பேச வேண்டினான்.

தம்பியின் ஆசைக்கு அவளை இசையச் சொல்லிப் பேசிப் பார்த்தாள். “நீயே ஒப்புக்கொள். ரகசியமாக அவனோடு உறவு கொள்; யாரும் உன்னை ஒன்றும் சொல்ல முடியாது” என்று புத்தி சொன்னாள். “அவன் பொல்லாதவன்; பிடிவாதக்காரன், முரடன்; யாரும் இங்குத் தடுக்க முடியாது” என்றும் அச்சுறுத்தினாள். இதமாகப் பேசினாள்; பதப்படுத்த முடியவில்லை.

கட்டில் அறைக்கு அவன் அவளைக் கைப்பிடித்து இழுத்தான்; விட்டில் பூச்சி என அவன் அவளைச் சுற்றிச் சுழன்றான்; வெகுதூரம் ஒடிச் சென்றாள்; பேயைப்போல் அவளைப் பின் தொடர்ந்தான்; அவள் அரச அவைக்கு ஒடினாள்; அங்கே அவன் ஒரு துச்சாதனன் போல் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/158&oldid=1048210" இலிருந்து மீள்விக்கப்பட்டது