பக்கம்:மாபாரதம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

157


“நாலுபேர் அறிந்தால் நம்மைப்பற்றி இகழ்ந்து பேசுவர்; பாழ்மண்டபத்துக்கு வந்துவிடு; அதனைப்பள்ளி யறை ஆக்கலாம். நள்ளிரவு, சாமம் சரியான நேரம்” என்றாள்.

ஆசைக்கடலில் ஆழ்ந்தவன் அவளால் நாசச் சொற்களில் மோசம் போய்விட்டான் ; காதல் என்பதே களவின் அடிப்படையில்தானே அமைவது, திருடித் தின்பதில் உள்ள இன்பம் தனி இன்பம்தான் என்று முடிவு செய்து கொண்டான். அவளை அடைவது திண்ணம் என முடிவு செய்து கொண்டான்.

பாழ் மண்டபத்துக்குக் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தான்; கைவளை ஒலிக்க முரட்டு உருவம் அந்த இருட்டு வேளையில் வந்து அவனைச்சந்தித்தது. குருட்டு ஆசை அவனை மருட்டி விட்டது. அதனைக் கட்டி அணைத்தான். வீமன் அவ்வுருவம் என்பது தெரியாது; இருவரும் கட்டிப்புரண்டனர்; காதல் செய்ய அல்ல; மோதல் செய்ய, கீசகன் கீச் மூச்” என்று பேச முடியாமல் மரணத்தைச் சந்தித்தான்.

பேய் அறைந்து விட்டது என்று பேசியவர் சிலர்; கந்தருவன் வந்து கொன்று விட்டான் என்று கதை அளந்தவர் பலர்; வீமன் கொன்றான் என்பது யாருக்கும் தெரியாது. அரசனும் அரசியும் மட்டும் வண்ண மகளின் திட்டம்தான் என்று ஐயம் கொண்டனர். திருடனைத் தேள் கொட்டினால் அவன் எப்படிக் கேள்வி கேட்க முடியும். அவர்கள் உள்ளுக்குள் வெந்து வேதனை உற்றனர்.

அத்தினாபுரியில் ஆராய்ச்சி

விராடன் ஊரில், பாண்டவர் வருவதற்கு முன் பஞ்சமும் வறுமையும் நிலவின; இவர்கள் வந்ததும் பயிர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/160&oldid=1038692" இலிருந்து மீள்விக்கப்பட்டது