பக்கம்:மாபாரதம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மாபாரதம்

பசுமை உற்றன; வானம் மழை வழங்கியது. பாண்டவர் அடி எடுத்து வைத்ததால்தான் பலபடியாக இறைவன் படி அளக்கிறான் என்று துரியோதனாதியர் பலபடியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

கீசகன் மரணம் ஐயத்தை அதிகப்படுத்தியது. வீமன் தான் அவனைக் கொன்றிருக்க முடியும் என்று யூகித்தனர். அதனால் பாண்டவர்கள் விராட நகரில்தான் தங்கி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

புற்றில் இருக்கும் அரவை வெளிப்படுத்துவது எப்படி? குகையில் உள்ள புலியைக் கூவி அழைப்பது யார்?

“தொழுவத்தில் உள்ள கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டால் அது கத்தும்; அதைக் காப்பாற்றப் பசு ஒடி வரும். இது தான்வழி” என்று முடிவு செய்தனர்; “விராடனுக்குத் தொல்லை கொடுத்தால் அவனுக்கு விசயனும் மற்றவர்களும் துணைக்கு வருவார்கள். இதுதான் தக்க வழி” என்று கன்னன் தன் கருத்தைக் கூறினான்.

சகுனியின் சதிகளுக்கு இவன் துணை போவான் என்று அறிந்து துரியன் மகிழ்ந்தான்.

திரிகர்த்த நாட்டின் தலைவன் துரியனுக்கு நண்பன்; அவனைத் தட்டிக் கொடுத்தான். “நீ வடக்குப்பக்கம் சென்று வளைத்துக் கொள்; தெற்குப்பக்கம் நாங்கள் சூழ்கிறோம்” என்றான்.

திரிகர்த்தன் படைகள் வடக்குப்பக்கம் சென்று விரா டன் நகரைச் சூழ்ந்தது. விராட மன்னனும், தருமனும், வீமனும் அவனை எதிர்க்கச் சென்றனர். உடன் நகுலனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/161&oldid=1038715" இலிருந்து மீள்விக்கப்பட்டது