பக்கம்:மாபாரதம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

159

சகாதேவனும் துணைக்குச் சென்றனர். அருச்சுனன் பேடி என்பதால் அவன் ‘லேடி’களுடன் அரண்மனையில் தங்கி விட்டான்.

விராடன் தனியன் தானே அவன் என்னசெய்ய முடியும் என்ற திரிகர்த்தன் ஏமாந்து விட்டான். வீமன் உடல் வலியன்; நகுலன் குதிரைப்படைத்தலைவன். சகாதேவன் சகலமும் கற்றவன். இந்த மாவீரர்கள் களத்தில் இறங்கு வார்கள் என்று அவன் கருதவில்லை. ஈட்டிகள் பதித்து வைத்த நீர் நிலையில் நீந்தி விளையாடும் கதி தான் அவன் நிலையும். படைகள் புறமுதுகிட்டன. இந்த முறையில் துரியன் திட்டம் தோல்வியடைந்தது.

அடுத்தது தென் முனை; துரியன் தன் பெரும்படையுடன் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து சென்றான். கன்னனும் அவனுக்குத் துணை நின்றான். விராடனோடு ஊர் ஆண்கள் போர்க்களம் நோக்கிச் சென்று விட்டனர். பெண்கள் என்ன செய்ய முடியும்? அரசியிடம் வந்து முறையிட்டனர்.

அவள் ஒரே மகன் உத்தரன் செயலிழந்து சோர்ந்து நின்றான்; ஆடத்தெரியாதவள் கூடம் போதாது என்று சொல்வாளாம். அதுபோலத் ‘தேர் ஒட்டி இருந்தால் போர் தொடர முடியும்’ என்று பெருமை பேசினான். விரதசாரணியாக இருந்த திரெளபதி பேடியாக இருக்கும் அவன் தேர் ஒட்டுவதில் வல்லவன் என்றாள். போர்க்களம் கண்டவன் என்றும் பேசினாள். அவனை அழைத்துச் செல்லும்படி கூறினாள்.

அவனால் மறுக்க முடியவில்லை; தேரில் அருச்சுனன் அமர்ந்தான். உத்தரன் கடல் போன்ற சேனை கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/162&oldid=1048214" இலிருந்து மீள்விக்கப்பட்டது