பக்கம்:மாபாரதம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

மாபாரதம்

நடுங்கி விட்டான்; அவன் தேரில் இருந்து இறங்கி வீடு நோக்கி ஓடினான்; அவனைக் கட்டிப் பிடித்துத் தேரில் உட்கார வைத்தான். அருச்சுனன் தான் மறைத்து வைத்த சில படைக்கருவிகளை எடுத்து வந்து வில்லும் அம்புமாகத் தேர் ஏறி நின்றான். அவன் அம்புகளுக்கு ஆற்றாமல் துரியனின் படைகள் பின்வாங்கின. கன்னனும் அருச்சுனன் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை; தக்க படைகளோடு போர் தொடுக்கவும் செல்லவில்லை. ஆனாலும் துரியனோடு சேர்ந்து ஒற்றுமையாகப் பின் நோக்கி நடந்தான்.

பாண்டவர் அவசரப்பட்டு வெளிப்பட்டு விட்டனர் என்று வாதம் எழுப்பினான். வீடுமன் அதனை மறுத்து ஆண்டுகள் பதின்மூன்றும் கழிந்துவிட்டன என்று விளக்கினான்

குறித்த காலமும் முடிந்தது. பேடியாகச் சென்ற அருச்சுனன் தன் பழைய வடிவில் களத்திலிருந்து திரும்பினான். தன் நாட்டில் பாண்டவர்கள் தங்கி இருந்ததற்கு விராடன் பெருமை பெற்றான். அதே சமயத்தில் அவர்களை அடிமைப்படுத்திப் பணி செய்ய வைத்தது அதற்காக வெட்கப் பட்டான். பாண்டவர்கள் அதற்காக வருத்தப்படவில்லை. கீசகனின் கீழ்மைமட்டும் அருச்சுனனைச் சினந்து எழ செய்தது. தீமைகள் பல செய்தவர் எனினும் அவர்கள் செய்த ஒரு நன்மையை எண்ணிப் பார்த்து அடங்குவதுதான் அறிவுடைமை என்று தருமன் அறிவுரை கூறினான். வள்ளுவர் அறத்துப்பால் அவனை அதற்கு அப்பால் போக முடியாதபடி தடுத்துவிட்டது.

பகையை மறந்து நகையை விளைவித்தனர். உத்தரன் அவன் தன் தங்கையை அருச்சுனனின் மகன் அபிமன்யுவுக்கு மணம் முடித்துத் தந்தான். கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/163&oldid=1038876" இலிருந்து மீள்விக்கப்பட்டது