பக்கம்:மாபாரதம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ராசீ

161

வந்து கலியாணத்தில் கலந்துகொண்டான் அதற்குப்பிறகு அனைவரும் விராட நகரைச் சார்ந்த உபப்பிலாவியம், என்னும் புதிய ஊரில் வசிக்கத் தொடங்கினர்.

6. துனது உரைகள்

உலூகன் தூது

உபப்பிலாவியம் என்னும் நகரில் சீட்டு விளையாடச் சிறுவர்கள் கூடவில்லை. நாட்டு உரிமையை அடைய வழிவகை காணப் பாண்டவர்கள் கூடிப் பேசினர்.

அணுகுமுறை பற்றி அரச அவையில் விவாதம் தொடங்கினர். சூது ஆடி அவர்கள் நாட்டை இழந்தனர். மறுபடியும் அதே தவறு செய்துதான் ஆட்சியைப் பெற வேண்டும் என்று சூதுகள் நிறைந்த கண்ணன் தன் கருத்தைத் தெரிவித்தான்.

பலராமன் ஆட்சேபித்தான். அவன் சட்ட நுணுக்கம் அறிந்தவன். ஆதலின் சட்ட விளக்கத்தை எடுத்து உரைத்தான்.

“அடிப்பட ஆண்ட நாட்டைப் பிடிபடக் கேட்பது எடுபடாது” என்று உரைத்தான். பன்னிரண்டு வருஷம் ஒரு உடைமை ஒருவரிடம் இருந்தால் அது அவர்க்கு உரிமையாகும் என்று உரிமை பற்றிய சட்டத்தை எடுத்துப் பேசினான்.

சாத்தகி என்பவன் கண்ணனுக்கு இளையோன் ஆவான். “பலராமன் வெள்ளை நிறைத்தினன். அவன் உள்ளமும் ஏன் வெண்மை நிறைந்ததாக இருக்கிறது” என்று அவனைப் பாராட்டுவது போலப் பேசினான்.

ll

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/164&oldid=1048215" இலிருந்து மீள்விக்கப்பட்டது