பக்கம்:மாபாரதம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

மாபாரதம்


அவன் பெருமிதத்தைப் பாராட் டினான். பாண்ட வர்க்குத் தான் வேண்டியவன் என்று தெரிந்தும் தனக்கு உபசாரங்கள் செய்தது அவன் பெருந்தன்மை என நினைத்தான்.

பிறகு தெரிந்தது சோழியன் குடுமி சும்மா ஆட வில்லை என்பது, “வரப்போகும் போரில் நீ என் பக்கம் நின்று உதவ வேண்டும்” என்றான்.

அவன் தந்திரம் அறிந்தும் அதில் இருந்து தப்ப இயல வில்லை; மந்திரத்திற்குக் கட்டுப்பட்ட நாகம் ஆனான், பிறகு தருமனைச் சந்தித்தான். அவன் முந்திக் கொண்டான் என்பதை அறிவித்தான் “நீ எங்கள் சாவுக்குத் துணை போகக்கூடாது” என்று தருமன் கேட்டுக் கொண்டான்.

“வார்த்தை தவற முடியாது; உபகாரம் செய்தலுக்கு அபகாரம் செய்ய முடியாது” என்றான்.

“அருச்சுனனைக் கொல்ல நீ துணை இருக்கக்கூடாது” என்றான்.

“நான் கன்னனுக்குத் தேர் ஒட்டுவேன்; அப்பொழுது என் பேரொளியால் கன்னன் மங்கிப்போவான்; அவனை எளிதில் அருச்சுனன் வென்று விடலாம்” என்றான்.

துரியன் புத்திசாலியாகிவிட்டானே என்பதற்குத் தருமன் வருந்தினான். போரில் கூரிய அறிவும். திட்ட மிட்டுச் செயல்படும் திறனும், காலம் கருதி எதையும் சாதிக்கும் இயல்பும் வேண்டும் என்றும் நினைத்துத் தெளிவு பெற்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/167&oldid=1048218" இலிருந்து மீள்விக்கப்பட்டது