பக்கம்:மாபாரதம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

165


வாசுதேவனைப் படைத்துணைக்கு அழைத்தது

தொட்டிலையும் ஆட்டுவான்; பிள்ளையையும் கிள்ளு வான்” என்பதற்கு இலக்கியமாக விளங்கிய கண்ணனை நம்பி இருப்பதற்கு இயலவில்லை. நட்டாற்றில் இறங்கினால் அவன் யாரைக் கை தூக்கி விடுவான் யாரைக் கால் தடுக்கி வீழ்த்துவான் என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தது.

‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்று கேட்டு அறிந்தும் நச்சினை இச்சிக்கும் அரவக்கொடியோன்போர் செய்வது என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான். புயலுக்குப் பின் அமைதி ஏற்பட்டது. நாயும் பூனையும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தன, குலைத்தும், கத்தியும் அடங்கி விட்டனர். கன்னனையும் வீடுமனையும் அமைதிப்படுத்திவிட்டுத் துரோணனைக் கலந்து பேசிக் கண்ணனைப் படைத்துணைக்கு அழைப்பது என்று முடிவு செய்தான்.

துரியன் துவாரகை நோக்கித் தனியாளாய்ப் புறப்பட்டான். அங்கே கொடிச்சீலைகள் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன. அவனை “வராதே நீ போ; வாசுதேவன் படைத் துணைக்கு ஆகமாட்டான்” என்று கை மறித்துக் கூறுவது போல இருந்தது.

“ஈண்டு நீ வரினும் எழில் உடை எழிலி வண்ணன் பாண்டவர் தங்கட்கு அல்லால் உமக்குப் படைத்துணை யாக மாட்டான்; மீண்டுபோக” என்று வியன் மதிற்குடுமி தோறும் கொடிச் சிலைகள் கைகளால் தடுப்பது போன்று இருந்தது.

வாரல் என்பனபோல் அக்கொடிச் சீலைகள் மறித்துக் கைகாட்டின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/168&oldid=1048219" இலிருந்து மீள்விக்கப்பட்டது