பக்கம்:மாபாரதம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

மாபாரதம்


வருவது அறிந்து பாண்டவர்க்கு உறுதிகள் செய்யக் கருதிய கண்ணன் துரியனைத் தடை செய்யாது உள்ளே விடுக என்று சொல்லிவிட்டு அநந்த சயனன் ஆகி அரிதுயி லில் பள்ளி கொண்டான். வந்தவன் நேரே அவனைத்தட்டி எழுப்பாமல் அவன் தலையணைக்கு இவன் ஓர் அணையானான்.

சற்று நேரத்தில் பற்றுமிகு அருச்சுனனும் உள்ளே வந்து கண்ணன் திருவடி தீண்டி அவன் திரு முன் அமர்ந் தான். விழித்து எழுந்தான். முன் இருந்த விசயனைக் கண்டு முறுவல் காட்டி, ‘நன்மை எய்துக’ என்று வாழ்த்துக் கூறினான்.

இருவரும் உதவி வேண்டிக் கண்ணன்பால் நேயம் காட்டினர்.

தருமனிடம் அவனுக்குத் துணையிருப்பதாகத் தான் சொல்லியதையும், முதற்கண் தன்கண் அருச்சுனனைப் பார்த்ததையும் எடுத்துச் சொல்லி தருமனுக்கே உதவத் தான் கடமைப்பட்டிருப்பதாகக் கண்ணன் கூறினான்.

பாண்டவர்களுக்குப் படைகளை உதவி அவர்கட்குத் துணை போகக்கூடாது என்று பாண்டவரின் பகைவன் வேண்டுதல் விடுத்தான்.

அருச்சுனன் கருத்தை அறிய, “நீ என்ன சொல்கிறாய்?” என்று கேள்வி விடுத்தான்.

“என் தேரை நீ செலுத்தினால் அதுவே போதும்” என்றான்.

துரியனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கண்ணன் படை எடுத்துப் போருக்கு வரமாட்டான் என்பதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/169&oldid=1048220" இலிருந்து மீள்விக்கப்பட்டது