பக்கம்:மாபாரதம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

மாபாரதம்


“வீரம் குன்றி விவேகம் பேசி எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை; இந்த பூமிக்குப் பாரமாக இருக்கின்ற நூற்று வரையும் அவர்களைப் போற்றுப வரையும் காலன் ஊருக்கு அனுப்பி வைத்துக் கணக்கு முடிப்பதே எங்கள் அறம், கடமை; செயல்முறை” என்று தருமன் கூறினான். “நீ சொல்லும் தவ வேள்வியை விட்டுக் குருதி சிந்தும் கள வேள்வியே யாம் செய்யத் தகும் தவம் ஆகும். நரகத்தில் எங்களுக்கு நிறையக் கடமைகள் இருக்கின்றன. அதனைச் சீர்படுத்தி அதை வாழத் தகுந்த தாக ஆக்குவது சிறந்த பணியாகும். எம் பெரியதந்தை திருதராட்டிரனுக்கு எப்போதும் ஒரு கண்ணில் வெண் ணெய்; இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு; அவர் பின் புத்திக்காரர். அவர் பேச்சைக் கேட்டு எங்களுக்குத் தவம் போதிக்க வந்து இருக்கிறாய், அதைச் சோம்பேறிக்கு, உழைக்காதவர்களுக்கு, மடாதிபதிகளுக்கு, மதத்தை வியாபாரம் செய்யும் போலிகளுக்குப் போய் உரை. அவர் களுக்கு ஆறுதலாக இருக்கும். பாரதத் திருநாட்டில் மதத்தை அரசியல் ஆக்கும் பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் போய்ச் சொல்” என்றனன்

கண்ணன் அதையே மிகவும் அழகாகச் சொன்னான். “நீர் கவலைப்பட வேண்டாம் இவர்கள் பூமியை ஆள் வார்கள். அது அவர்களுக்குத் தகுதியாகும்; உம்மவர்கள் வான் ஆள வானவர் பதம் தருவார்கள். அவர்களை அமரர் உலகு ஆளச் செய்வார்கள்; போய் வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

“காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்றுபாடிக் கொண்டுவந்தவன் “போரே இனி மெய்யடா அது தடுப்பது இயலாதடா” என்று வேறு வகையாகப் பாடிக்கொண்டு துரியனிடம் போய்ச் சேர்ந் தான், தாளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/171&oldid=1048224" இலிருந்து மீள்விக்கப்பட்டது