பக்கம்:மாபாரதம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

மாபாரதம்


“நாடா காடா அது தெரியாது அமைதிக்கு வழி வேண்டும்; இருவரும் சமாதானமாக வாழ வழி செய்ய வேண்டும். இதுதான் யான் விரும்புவது” என்று தருமன் கூறினான்.

“இதுவரை அமைதிபேசி அதைச்சாதித்தவர்கள் உலகில் இருந்ததாகத் தெரியவில்லை; அப்படிப் போரைத் தவிர்த்திருந்தால் சரித்திர பாடங்களுக்கே வேலை இருக்காது; அழிவு வரும் என்று தெரியும்; தெரிந்துதான் புத்தி சாலிகள் போரைத் துவக்குகிறார்கள். இதுதான் உலக வரலாறு” என்றான் கண்ணன்.

“சுற்றத்தையும் நற்றவ ஞானிகளாகிய குருக்களையும் கொன்று நாடாள்வதைவிடக் கனியும் கிழங்கும் தின்று காடு சென்று ஒதுங்கி வாழ்வதே தக்கதாகும்” என்றான் தருமன்.

“வீரத்தைச் சோர விட்டு விடுதலை பெறாவிட்டால் நீங்கள் கோழைகள் என்று இந்த உலகம் ஏசுமே; வஞ்சினங்கள் வாய்கிழியப் பேசிவிட்டு அஞ்சினம் என்று சொன்னால் அடுக்குமோ! உலகம் எடுக்குமோ என்ன செய்வது?” என்றான் கண்ணன்.

அதற்குமேல் தருமனால் வாது செய்ய முடியவில்லை. ஏழையாக ஆவதற்குத் துணிந்தவன் கோழை என்ற பெயரை எடுக்க விரும்பவில்லை. அதனால் கண்ணனைத் தூது சென்று விடை கேட்டு வரும்படி அனுப்பினான்.

“நாடு கேள்; மறுத்தால் கேளிர் என்று கருதத் தேவை யில்லை; போரில் அவர்களை வளைத்து நம் தாளில் விழ வைப்போம்” என்றான் தருமன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/173&oldid=1041237" இலிருந்து மீள்விக்கப்பட்டது