பக்கம்:மாபாரதம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

மாபாரதம்


“கன்னனுக்கு முடி சூட்டி மன்னன் ஆக்கினால் பாரதப்போர் நின்றுவிடும்; அவன் பாண்ட வரில் மூத் தோன்; கவுரவரின் நண்பன்; அதனால் அந்தக் கதை முடிந்தது. திருப்பதிக்கு அனுப்பி வைத்துத் திருமதிக்கு மொட்டை அடித்துவிட்டால் கூந்தலைப் பற்றிப் பேச்சு எடுபடாது; துள்ளிக்குதிக்கும் அருச்சுனனை முதலில் கொன்று முடித்து விடவேண்டும். கன்னனா விசயனா என்று வீரவசனம் பேசியவர்கள் அவர்கள்; கன்னன் வாழ்ந்தான் என்றால் அருச்சுனன் வாழ இயலாது. அதனால் அவனைக் கொன்றுவிட வேண்டும்; வேறுவழி யில்லை. முடிச்சுபோட்டுச் சிக்கல்களை ஏற்படுத்தி வரும் உன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தினால் எல்லாம் அடங்கி விடும்” என்று தன் கருத்தை விளக்கினான்.

“முன்னம் கூறியவை அனைத்தும் நீ முடித்தாலும் என்னை நீ எப்படிக் கட்டுவாய்?” என்றான் கண்ணன்.

“அன்புக்கு ஆண்டவன் கட்டுப்பட்ட வன்; உன்னை என் தியானத்தில் கட்டுப்படுத்த முடியும்” என்றான். கண்ணனை நினைத்துத் தியானம் செய்தான், அவன் தனித்த அன்புக்குக் கட்டுப்பட்டான் கண்ணன்.

தன்னை விடுவிக்குமாறு வேண்டினான்.

“இப்பொழுது பேசிய இந்த எதிர் உரைகளை வெளியே சொல்லாமல் காக்க உறுதி அளிக்க வேண்டும்” என்றான் கண்ணன்.

“பாரதப்போரில் எங்கள் ஐவரைக் காக்க உறுதி அளிக்கவேண்டும்” என்று கேட்டு வற்புறுத்தினான் சகா தேவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/177&oldid=1048227" இலிருந்து மீள்விக்கப்பட்டது