பக்கம்:மாபாரதம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

175


“ஒப்புக் கொண்டேன். அன்புக் கட்டில் இருந்து விடுவிக்குமாறு கண்ணன் வேண்டினான்; மறுபடியும்அவர்கள் அனைவர் முன் வந்து தொடர்ந்து பேசினர்.

தருமன் கருதுவது போலவே அடங்கிப் போவதுதான் சிறப்பு என்று தானும் கருதுவதாகக் கண்ணன் கூறினான். சமாதானமே உகந்தது என்றான்.

பாஞ்சாலி ஒப்பாரிவைத்தாள்: கண்களில் நீர் கரை புரண்டு பேசியது; பாஞ்சாலி ‘கோ’ என்று கதறினாள். அவன் திருவடியில் விழுந்து அலறி அழுதாள்.

“கற்றைக் குழல்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்த பார்வேந்தன் பற்றித் து கில் உரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்; கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா நீ அல்லாமல் அற்றைக்கும் என் மானம் யார் வேறு காத்தார்?” என்று அடுக்கி அவனை உயர்த்திப் பேசி அதற்கு மேல் தன் வாதத்தை எடுத்துப் பேசினாள்.

“மன்றினில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவர் பால் சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந் தால் அன்று விரித்த அருங்கூந்தல் வல்வினையேன் என்று முடிப்பது?” என்று அழுதாள்.

கண்ணனின் தம்பியாகிய சாத்தகி அதைக் கண்டு நெருப்புக்குத் துணையாகக் காற்று வீசுவதுபோல் கருத் துகளை அள்ளி வீசினான்.

“தண்டு இருந்தது இவன் கரத்தில், தனு இருந்தது அவன் கரத்தில்; வண்டு இருந்த பூங்குழல் மேல் மாசிருந்தது என இருந்தாள்; கண்டு இருந்தீர் நீவிர் அனைவரும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/178&oldid=1048229" இலிருந்து மீள்விக்கப்பட்டது