பக்கம்:மாபாரதம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

மாபாரதம்


உண்டு களைப்பு நீங்கியதும் சாய்வு நாற்காலி கண்டு அதில் ஒய்வு கொண்டிருந்தான்.

‘நீ இங்குத் தனித்து வந்தது ஏன்?’ கேட்டான் விதுரன்.

“ஐந்து பேர் அவரும் உன் மைந்தர்கள் தாம். அவர்கள் குந்தி இருக்கக் குடிசை கேட்டு வந்தேன்” என்றான்.

“அடியாத மாடு படியாது; அடித்துத்தான் காயைப் பழுக்க வைக்க முடியும்” என்றான் விதுரன்.

“தானாகக் கணிகிறதோ” என்று பார்க்க வந்தேன்.

மறுநாள் கண்ணன் கடமையை முடிக்கக் கண்ணில்லாதவன் மைந்தனாகிய துரியனின் அவைக்கு வந்தான் வீடுமன், துரோணன், கிருபன், மற்றும் உள்ள பெரிய மனிதர்கள் சிறுமை பாராட்டாது அவனை வரவேற்பதில் பெருமை காட்டினர். கூசி ஒடுங்கிய சகுனியும் கன்னனும் கூனிக் குறுகித் தலை கவிழ்ந்தனர். துரியன் ‘வருக’ என்று கூறவும் வாய்வராமல் தவித்தான். இடம் இருந்தது; இருக்கை பெற்றான்.

“வர்க்கபேதம் பாராமல் விதுரன் வீட்டுக்குச் சென்றது ஏன்?” என்று துரியன் கேட்டான்.

“பேதம் என்பது வேதம் கற்ற எவருக்கும் ஏற்பட வாய்ப்பு இல்லை; உன்வீடு என் வீடு; நான் கேட்க வந்தது நாடு; இங்கே உன் வீட்டில் சோற்றை உண்டு அதன்பின் உன்னைப் பார்த்துக் குரைக்காமல் இருக்க முடியுமா” தூதுவனாக வந்த யான் ஏதிலன் ஆகிய விதுரன் இல்லில் தங்கினேன்” என்றான்.

“சரி! வந்த செய்தி யாது?” என்று வினவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/181&oldid=1048232" இலிருந்து மீள்விக்கப்பட்டது