பக்கம்:மாபாரதம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

179


“சொல்லித் தெரிய வேண்டியது இல்லை மன்மதக் கலை; தெரிந்தும் சொல்லவேண்டி உள்ளது அரசியல் கலை”.

“குருகுலத்தில் பிறந்த மைந்தர்க்கு உரிய நாடு கொடு; அதை மறுத்தால் அலர்கள் வாழ ஐந்து ஊர் விடு; அதற்கு நீ சொல்லி வரும் கெடு யாது?” என்றான்.

“ஐந்து ஊர் மட்டும் அல்ல; ஐந்து ஒட்டை வீடுகளும் அவர்களுக்கு இல்லை. காட்டில் வாழ்ந்தவர்கள் அந்தக் காட்டுமிராண்டிகள் நாகரிக உலகில் வாழத் தகுதி இழந்து விட்டனர்” என்றான்.

“வழி இல்லை; ஒரு படி ஏற வேண்டியது தான்” சங் கீதம் ஆரோகணத்தை நோக்கிச் சென்றது.

“உருப்படியாக ஏதாவது சொல்ல முடியுமா? “ என்றான் கண்ணன்.

“படிப்படியாக நீங்களே இறங்கி வந்து விட்டீர்களே”

“ஒருபடி அவர்கள் உயர்ந்து நின்று உங்களை அடித்து நொறுக்கி அடிபணிய வைப்பார்கள்; அவர்கள் சொற்படி உங்களைக் கீழ்ப்படிய வைப்பார்கள்; உமக்குப் பாடம் கற்பிப்பார்கள்” என்றான்.

உருத்து எழுந்தான் துரியன்;தன் கருத்தை இழந்தான். “சந்திப்போம் படுகளத்தில்” என்று போருக்கு உறுதி தந்தான். “கைபோட்டுக் கொடு; அது தான் வீரத்துக்கு அழகு” என்றான் கண்ணன்.

“பால் கறக்கும் கையில் கோல் பிடிக்கும் கை படுவது மரபுக்கு இழுக்கு” என்றான் துரியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/182&oldid=1048233" இலிருந்து மீள்விக்கப்பட்டது