பக்கம்:மாபாரதம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

மாபாரதம்


“கோல்பிடிப்பதில் நம் இரு சாதிக்கும் வேறுபாடு இல்லை; அந்த வகையில் நாம் சமம் தான்” என்று சிரித்துப் பேசினான்.

“ஞால முற்றும் இனிப் பாண்டவர்க்குத் தான்” என்று சொல்லிவிட்டு, வணக்கம்; வந்தே மாதரம் பாடி முடித்தான்.

கண்ணன் கண்ணில் மறைந்ததும் ஒண்டிக் குடித்தனம் செய்து கொண்டிருந்த அரசியல் துறவியாகிய விதுரனை விளித்து, “என் பகைவனுக்கு நீ எப்படி இடம் அளித்தாய்?” என்று கடு கடுத்தான்.

“தாசிமகன் நீ; அதனால் காசு கிடைக்கும் இடத்துக்கு முந்தானை விரித்தாய்; என் முகத்தில் விழிக்காதே” என்றான்.

சிற்றப்பன் என்றும் பாராமல் சிறுமை பேசினான். பேசிய அந்த அற்பனை எதிர்த்து விதுரன் வஞ்சின மொழி கூறினான்.

“நல்லது செய்ய நினைத்தேன்; நீ அல்லது செய்து அழிகிறாய்”

“அழிவுக்கு வழிகோலும் உனக்கு யான் இனிவழிப் பாதையாக இருக்க மாட்டேன்” என்று தன் கை வில்லை முறித்துப் போட்டான். அவை நடுங்கியது: “வில் வீரன் விதுரன் விடுதலை பெற்றுவிட்டால் விசயனின் வில்லுக்கு யார் இனி எதிர் நிற்க முடியும்” என்று கதி கலங்கினர்.

“அவையில் முற்பட்டுப் பேசிப் பழக்கப்பட்டுக் கவைக்கு உதவாத பேச்சு தரும் கன்னன் “விபீஷணன் போய் விட்டதால் இராவணன் வீரம் குன்றியதில்லை; கும்ப–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/183&oldid=1048234" இலிருந்து மீள்விக்கப்பட்டது