பக்கம்:மாபாரதம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

181

கருணன் நான் இருக்கிறேன். கடமை முடித்துக் கொடுக்க” என்று கனன்று பேசினான்.

மண் குதிரை அவனை நம்பிக் கண் கெட்டவன் மகன் துரியன் பெருமிதம் கொண்டான்; “செஞ்சோற்றுக் கடன் மறவாச் சிலைவீரன் கன்னன் இருக்கும் போது வெறுஞ் சோற்று வீணன் விதுரன் போனால் என்ன?” என்று கூறி அவையைக் கலைத்தான்.

விதுரன் வீட்டுக்கு வந்த கண்ணன் அவனோடு சதுர மாகப் பேசிச் சதிர் விளையாடினான். கருத்துள்ள மொழி களைக் கல்வி வல்ல விதுரன் வாயில் இருந்து வரவழைத்தான்.

“வில் உம்மை என்ன செய்தது? அதனோடு விளையாடினர் என்ற சொல் கேள்விப்பட்டேன்” என்று கூறி அவனைச் சீண்டினான்.

“ஆகுவது கருதாவிட்டால், அமைச்சர் சொல் கேளா விட்டால், அழிவது சிந்திக்காவிட்டால், விளைவதை உணராவிட்டால், நாவது காக்காவிட்டால் அவனுக்காக ஒருவன் சாவது பழுதாகும்” என்றான் விதுரன்.

தன்னைப் பிரித்துப் போர்க்களம் போகா வண்ணம் செய்துவிட்ட சூழ்ச்சியை விதுரனால் உணர முடியாமல் போய்விட்டது. கண்ணன் புகழ் மொழி அவனைக் கோழையாக்கி விட்டது. படித்தவர்கள் பேசுவார்கள்; செயல்படப் பின்வாங்குவார்கள் என்பதற்கு விதுரன் ஒர் எடுத்துக்காட்டாக அமைந்தான். தவறு என்றால் துரி யனைக் கண்டித்து இருக்கவேண்டும். தன்னை இகழ்ந்தான் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு நாட்டு நலனை மறந்தான். அதே அவைக்களத்தில் துரியனை எதிர்த்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/184&oldid=1044862" இலிருந்து மீள்விக்கப்பட்டது