பக்கம்:மாபாரதம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

185


“அரை வேக்காடு நீ; உன்னை யார் உள்ளே விட்டார்கள்” என்று சீறிய குரலில் அண்ணன் துரியன் அவனை அடக்கி வைத்தான்.

நச்சு அரவம் ஆகிய துச் சாதனன் அதனை ஆமோதித்துப் பேசினான்.

சிறியன சிந்தியாத கன்னன் அதற்கு இசையவில்லை. கண்ணனைத் தானே நேரில் சென்று வளைத் துப்பிடித்து அழிப்பது எனக் கூறிச் சிலம்பம் பேசினான்.

கூட இருந்து குழி தோண்டிப் பழகிய மாமன் சகுனி ‘கண்ணனை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் இல்லை’ என்றான். கூறியவை எல்லாம் புகழ் சேர்க்கும்; புண்ணியம் சேர்க்கும்; கண்ணியம் சேர்க்கும்; ஆனால் நண்ணியது அடைய முடியாது. அதற்குத் தேவை இல்லை. என்றும் சொல்லி அவன் சார்பில் புதிய சாதனை ஒன்று கூறினான்.

‘தரையில் குழி ஒன்றுதோண்டிக் குந்தியின் மருமகனை மேலே திரையிட்டுக் கீழே அறையிட்டு அதில் விழவைத்துப் பிடிப்பதே அறிவுடமை’ என்றான்.

“கொலைக்கு அஞ்சாத கொடுமையாளரைக் குழியில் வைத்துத் தடுக்கி விழும் கண்ணனை எதிர்த்துக் குத்திக் கொலை செய்து ஒழிக்க வேண்டும்” என்றான். குறுக்கு வழியில் சறுக்குமரம் ஏறிச் சரியும் பழக்கமுடைய துரியன் மாமன் பேச்சுக்கு மதிப்புத் தந்து “ஆமாம் அதுவே செய்க” என்று ஆட்களிடம் ஏவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/188&oldid=1048235" இலிருந்து மீள்விக்கப்பட்டது