பக்கம்:மாபாரதம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

மாபாரதம்


மல்லர்களும், மடையர்களும், குத்துக்கோல் வீரரும், படியாத அடியாட்களும் மனை அடியில் பதுங்கி நின்று கண்ணனை அமுக்கிப்பிடிக்கக் காத்துக் கிடந்தனர். நில வறை ஒன்றை அமைத்து மூங்கில் பிணிப்பினால் மேலே முடித்தரையில் ஆதனம் அதன் மேல்வைத்து யாதவன் வருகைக்கு வஞ்சக்ர் அனைவரும் காத்து இருந்தனர்.

விடைபெற்றுச் செல்ல விடையன்ன நடையனாகிய கண்ணன் அரச அவையில் நுழைந்தான். தடையின்றி அவனை மட்டும் விடுத்து ஏனைய சேனைகளைத் தடுத்து நிறுத்தினர்.

வரவேற்பு இகழ் வாசித்தளித்து வந்தவனை உவந்து முகம் மலர உள் வரச் செய்து அகம் மலர ஆதனத்தில் அமர வைத்தனன். சதுரர்கள் சேர்ந்து சமைத்த நில வறை போல அறைகளும் படை வகைகளும் உள்ளே பதுக்கி வைத்திருந்தான். எதிர்பார்க்கவில்லை அதிர் வேட்டுக் கிளம்பும் என்று. வீரர்களும் சூரர்களும் கண்ணனின் விசுவரூபம் கண்டு குலை நடுங்கினர். அலை அலையாக மோதி அழிவு பெற்றனர். ஆலகால நஞ்சைக்கண்டு நடுங்கிய அமரரின் நிலையை அந்தகன் மைந்தரும் வந்திருந்த பேரறிஞரும், கண்ணனும் துரியனும் அடைந்தனர்.

“கண்ண! பொறுத்தருள்; மணிவண்ண பொறுத்தருள்: திண்மை இல்லாத தீயவர் செய்த பெரும் பிழை பொறுத்தருள்” என்று கூறிக் கண்ணனின் மலர் அடிகளில் விழுந்து வணங்கி வேண்டினர்.

கங்கை மகனாகிய வீடுமனும், கதிரவன் மகனாகிய கன்னனும், அம்பிகை மகனாகிய திருதராட்டிரனும், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/189&oldid=1044871" இலிருந்து மீள்விக்கப்பட்டது