பக்கம்:மாபாரதம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

187

மனைவி காந்தாரி பெற்ற நூற்றுவரும் மற்றும் இருந்த மன்னர்கள் அனைவரும் எழுந்து நின்று கண்ணனிடம் தங்கள் பிழையைப் பொறுத்தருள்க என்று கூறி வேண்டினர்

“நினைத்தால் எதையும் முடித்து விடும் ஆற்றல் எனக்கு உண்டு; மற்றும் படை எடுக்காதே என்று தொடை நடுங்கியாகிய துரியன் என்னை முன்னே வந்து வேண்டிக் கொண்டான், பஞ்சவர்கள் கூறிய வஞ்சின மொழிகள் வேறு உள்ளன; அவை உங்களை அழிக்கக் காத்து இருக்கின்றன. என் கரத்தில் இரத்தக் கறைபடிய நான் இங்கே குறைபட வேண்டியதில்லை எனக் கூறிச் சீற்றம் கொள் சிங்கமென முழங்கித் தன் பேருருவை அடக்கிக் கொண்டு தீராத விளையாட்டுப் பிள்ளையாகச் சிரித்து அந்த இடத்தை விட்டு நீங்கினான் ஆயர் குலக் கோமகன்.

அவன் ஏவிய முதல் அம்பு விதுரனை விலக்கியது. அடுத்துக் கன்னனிடம் பாய்ந்தான். தனியே அழைத்து அவன் பிறப்பு வரலாற்றை அவன் செவியில் ஒதினான். அவன் நம்பத் தயாராக இல்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. விதைகள் தூவப்பட்டன; மழை நீர் படும் போது தானாகப் பசும் பயிர் வளரும். பயனும் தரும் என்று கண்ணன் அவனை விட்டு நீங்கினான்.

அடுத்த சந்திப்பு அசுவத்தாமனோடு; எங்கேயோபோய்க் கொண்டிருந்தவனை “ஏன் அடாபணப்பையைக் கீழே போட்டுவிட்டாயே” என்றால் திரும்பிப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள்; அதுபோலக் கண்ணன் கைதட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/190&oldid=1044872" இலிருந்து மீள்விக்கப்பட்டது