பக்கம்:மாபாரதம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

மாபாரதம்

அழைத்தான்; மார் தட்டிப் போர் செய்யும் அவ்வீரன் யார் அழைத்தது என்று அறிந்து அருகே சென்றான்.

“இதோ பாரு நீயே சாட்சி, போருக்கு வரத் துரியன் வீரம் பேசி இருக்கிறான்; நாளை இல்லை என்று சொல் வான் நீயே காட்சி” என்றான். அவன் உச்சி குளிர்ந்து விட்டது அவனைப் பெரிய மனிதனாக மதித்துப் பேசிய தால.

கையில் இருந்த மோதிரத்தை வேண்டுமென்றே கண் ணன் தவறவிட்டான். ஐயோ பாவம் என்று அதை எடுத்துக் கொடுத்தான். “ஊர்க்கோள் சூரியனைச் சுற்றுகிறது” என்றான். வானத்தை அண்ணாந்து பார்க்க வைத்தான்.

பின்னர் சிரித்துப் பேசி “நீ போய் வா” என்றான். இதைத் தூர இருந்த துரியன் தீர விசாரிக்காமல் அவசர முடிவுக்கு வந்தான்.

பாண்டவர்க்குத் தான் துணை என்று அவன் சத்தியம் செய்ததாகக் கற்பித்துக் கொண்டான். “வலியச்சென்று மண்ணையும் விண்ணையும் சாட்சி வைத்து மோதிரம் தொட்டுச் சூள் உரைத்தான். அதனால் அவன் நம்பத் தகுந்தவன் அல்லன்” என்று கருதிவிட்டான்.

அரச அவையில் அவனைக் கண்டித்துப் பேசினான். துரியனின் நம்பிக்கையை இளம் வீரன் அசுவத்தாமன் இழந்துவிட்டான். படைத்தலைமை அவனுக்கு இல்லை என்று பறை சாற்றிப் பலர் அறிய அவனை ஒதுக்கினான்.

பிரித்து வைக்கும்திறன் கண்ணனுக்குக் கைவந்த கலை யாக இருந்தது. விதுரனைப் பிரித்தான்; சதுரங்கம் ஆடி–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/191&oldid=1048237" இலிருந்து மீள்விக்கப்பட்டது