பக்கம்:மாபாரதம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

189

னான். சாதனை செய்தான்; கன்னனைப் பிரிக்க விதைகள் துரவினான்.

அசுவத்தாமன் அவன் வீசிய வலையில் சிக்கித் திக்கு முக்காடினான்; அதற்குப் பிறகு தொடர்ந்து கன்னனை முடிக்க இந்திரனை அழைத்தான்.

விதுரன் மனையில் இருந்து கொண்டு அழைப்பு விடுத்து அவனை வரவழைத்தான்.

“பெற்றால் மட்டும் பிள்ளையா? அவனைக் காப்பது உன் கடமை இல்லையா” என்று புதிர் ஒன்று போட்டான்.

எதிர் ஒன்றும் பேசாது விதிர்ப்பு அடைந்து விளக்கம் கேட்டு வினயமுடன் நின்றான்.

“கன்னன் கதிரோன் மைந்தன்; அவன் அதிரத் தாக்கி னால் விசயன் வெற்றியை இழப்பான்; அதோடு அவன் வாழ்வும் அத்தமனம் ஆகும்” என்றான்.

“ஐயா! என் மகன் உயிர் தப்ப வழி உண்டா? இருந் தால் இயம்புக” என்றான்.

“கன்னன் மார்பில் கவசமும், காதில் குண்டலமும் அணிந்திருக்கும் வரை அவனை அவனியில் யாரும் அழிக்க இயலாது” என்றான்.

“யானும் என் மகனுக்கு அந்தக் கவசம் குண்டலம் மண் தலத்தில் விற்பனைக்கு எங்கிருந்தாலும் வாங்கித் தருகிறேன். கவசம் இருக்கும் இடம் அவசியம் உரை” என்று கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/192&oldid=1044972" இலிருந்து மீள்விக்கப்பட்டது