பக்கம்:மாபாரதம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

191


“கார்த்திகைக்குப் பின்னால் மழையும் இல்லை; கன் னனுக்குப் பின்னால் கொடையும் இல்லை” என்று வான் புகழ் பெற்றுவிட் டான்.

இந்திரன் அவனைப் பாராட்டி ஈட்டி ஒன்று பரிசாகத் தந்தான். அதைத் தன் மகன் மார்பில் எய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். கடோற்சகனே அதற்கு இலக்கு என்று சொல்லிக் கொடுத்தான். பதவியில் இருப்பவர் பாரபட்சமாக நடந்து கொள்வதால்தான் நீதியும் நேர்மையும் குறைகின்றன என்பதற்கு இந்திரன் எடுத்துக் காட்டாக விளங்கினான்.

வெட்கம் கெட்டு அந்தப் பரிசை வாங்கிய கன்னனும் தன் நிலையில் தாழ்ந்து விட்டான். கொடுக்கத் தெரிந் தவன் கேட்டுப் பெறுவதிலும் தன் பெருமையைக் காட்டி இருக்க வேண்டும். அவ்வகையில் அவன் மிகவும் தாழ்ந்து விட்டான். தெய்வம் என்பதால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துவந்த காலமாக அது இருந் தது. இந்தத் தேசத்தின் சாபக்கேடே இதுதான் என்பதை அவன் செயல் காட்டியது. பதவியைத் தவறாகப் பயன் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாம் முதல் எதிரிகள் இந்த தேசத்துக்கு என்பதை இந்திரன் செயல் எடுத்துக் காட்டியது.

கன்னனும் குந்தியும்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்று இராம காதை காதற் சந்திப்பைப் பற்றிக் கூறும்; தாய் சேய் சந்திப்பை அப்படிக்கூற இயலாது. பாலூட்டி வளர்க்க வேண்டிய மகனை அப்பால் விட்ட அன்னை அவனை மார்பிறுகப் புல்லி அந்த வயதில் பாலைக் குடிக்கச் சொல்லி அவன் தலையில் தட்டத் தவித்து நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/194&oldid=1048240" இலிருந்து மீள்விக்கப்பட்டது