பக்கம்:மாபாரதம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மாபாரதம்

அவன் அவளைப் பெற்ற தாய் என்று உறுதி செய்ய முடியாமல் பாசம் காட்ட முடியாமல் திகைத்தான். எனினும் பாண்டவரின் தாய் என்பதால் அவளுக்கு உரிய மரியாதை தந்து வரவேற்றான். கன்னன் ஏற்கனவே துரியனை அவைக்களத்திலேயே சந்தித்து அவன் பிறப்பு வரலாற்றை எடுத்துரைத்தும் அவன் அதை நம்பத் தயாராக இல்லை. கண்ணனின் சூழ்ச்சிகளில் இது ஒன்றாகும் என்று நினைத் தவனாய் அவளைத் தாய் என்று ஏற்கத் தயக்கம் காட்டினான்.

“பெற்றவள் நான்தான்” என்று கற்று அறிந்தவனாகிய கன்னனிடம் எடுத்து உரைத்தாள்.

பசையற்று ஆற்றில் விட்டவள் என்று அவன் அடி மனம் அவனிடம் அடித்துப்பேசியது.

கண்ணனின் சூழ்ச்சியாக இருக்கும் என்று யோசித்தான்.

பெற்றவள் என்னை ஆற்றில் விட்டாள். அதோடு அவள் கட்டியிருந்த சேலையையும் அடையாளத்துக்கு வைத்தாள். அதைக் கட்டும் பொய்யர்கள் மெய் வெந்து சாவர். இதுவரை இறந்தவர்கள் பலபேர்” என்றான்.

“நீயும் சாகத் துணிந்துவிட்டாய் தடுக்க முடியாது. வைத்திருக்கிறேன்” என்று கூறி அந்தப் பட்டுத் துகிலைக் கட்டிக்கொள்ள முன் வைத்தான்.

அதைக் கட்டிய அம்முதியவள் ஆண்டுகள் பல பின்னோக்கி நடந்தாள். இளமைக் கோலத்தில் அவன் முன் நின்றாள்; பாசம் இருவரையும் பிணித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/195&oldid=1044979" இலிருந்து மீள்விக்கப்பட்டது