பக்கம்:மாபாரதம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

197


முகூர்த்தம் கேட்டு நிச்சயித்தல்

படைகள் எல்லாம் குழுமிவிட்டன. நாள் பார்த்துப் போரை நடத்த வேண்டியது தான் எஞ்சி இருப்பது. நாள் குறித்துச் சொல்லத்தக்க அறிஞனும், களப்பலி கொடுத்து கருமத்தைத் தொடங்க முன்வரத் தக்க வீரனும் யார் என்று துரியன் விசாரித்தான். படைத் தலைவனான வீடுமன் சகல கலைகளிலும் வல்ல சகாதேவனே முகூர்த்தம் குறித்துக் கொடுக்கத் தகுதி உடையவன் என்றும், மகாவீர னான இராவானே களப்பலிக்கு உரிய காளை எனவும் குறிப்பிட்டான்.

துரியன் சகாதேவனிடம் சென்று நாள் கேட்டான். பகைவேறு; தொழில்வேறு என்று வேறுபடுத்திக் காணக் கூடிய மனப்பக்குவம் உடைய சகாதேவன் நாள் குறித்துக் கொடுத்தான். பகைவனுக்கு அருள்செய்யும் பரந்த உள்ளம் பாண்டவரிடம் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாக அமைகிறது.

தநுர் மாதம் அமாவாசை இரவே களப்பலியூட்டினால் அவர்களுக்கு வெற்றி என்று தெளிவாகச் சொன்னான்.

அருச்சுனனின் மகன் இராவான்; உலூபிக்குப் பிறந் தவன்; அழகிற் சிறந்தவன் அவனை அணுகி “நீ களப் பலிக்கு உதவ வேண்டும்” என்று துரியன் கேட்டான்.

தன்னை அவனுக்கு ஈவதால் போரில் பாண்டவர் தோல்வியுறுவது உறுதி எனத் தெரிந்தும் தன்னைப் பற்றி–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/200&oldid=1048243" இலிருந்து மீள்விக்கப்பட்டது