பக்கம்:மாபாரதம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

மாபாரதம்

யும் தன் பக்கத்தவர் பற்றியும் கவலைப்படாமல் தன்னை யே ஈய முன் வந்தான். ஈகையில் கன்னனுக்கு முன்ன வனாக நடந்துகொண்டான்.

சிறிய தந்தையாகிய துரியன் கேட்டு மறுப்புச் சொல்ல மனம் இல்லை.

“ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என் உயிர்மாள” என்றான்.

தீந் தேன்போன்ற சொற்களைக் கேட்டுத் தீயவனான துரியன் மனம் குளிர்ந்தான் .

“தந்தேன் உயிர்” என்ற போதினில் தேன் வந்து பாய்ந்தது அவன் காதினில் ‘தொம்தோம்’ எனப் பாடி வெற்றிக் களிப்பில் அவன் ஆழ்ந்தான்.

களப்பலிக்கு இரவான் இசைதல்

எதிரிகள் முந்திக் கொண்டனர். அவர்கள் திட்டத்தை முறியடிக்கும் பொறுப்பைக் குன்றம் எடுத்துக் கன்று களைக் காத்த கண்ணன் ஏற்று அமாவாசையை ஒருநாள் முந்தியே துவக்கிவைத்தான். அர்ச்சகர்களை அழைத்து வைத்தான். அவர்கள் வந்து குழுமிவிட்டனர். இதென்ன அநியாயம் என்று அடித்துப் பிடித்துக்கொண்டு ஆகாயத்தில் இருந்து சூரியனும் சந்திரனும் குளக்கரைக்கு வந்து விட்டனர்.

சூரியனும் சந்திரனும் இருவரும் அங்குச்சேர்ந்ததால் அதுவே அமாவாசை தினம் என்று அறிவித்தான் அச்சுதன் ஆகிய கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/201&oldid=1048244" இலிருந்து மீள்விக்கப்பட்டது