பக்கம்:மாபாரதம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

199


அடுத்தது களப்பளிக்குத் தன்னைத் தரக் கண்ணன் முன் வந்தான். போரும் வேண்டாம், ஊரும் வேண்டாம்” என்று கூச்சல் போட்டு “கோவிந்தா! எங்களை மன்னிக்கவும்” என்றனர் பாண்டவர்கள்.

“என்னை விட்டால் இராவான் தான் தகுதி என்று கண்ணன் கூற ஏற்கனவே இசைந்துவிட்டதால் அவன் தன்னைத் தர முன்னுக்கு வந்தான்.

அவனுக்கு ஒர் ஆசை சாவதற்கு முன்னால் போரின் வீரச் செயல்களைக் காண வேண்டும் என்று; களப்பலியில் தான் அறுப்புண்டாலும் போரைக் காணவேண்டும் என்ற விருப்பு அவனை விடவில்லை.

முதல் நாட் போருக்கு முன் இரவு குறிப்பிட்டபடி அவன் களப்பலிக்கு முன் நின்றான். அவன் தன் அங்கங் கள் சிலவற்றை அறுத்துக் காளி முன் இட்டு வருந்தாது முகம் மலர்ந்து நின்றான்; சாகவில்லை; களப்போரைக் கண்டு மகிழ் கொண்டு வாழ்ந்தான்.

எட்டாம் நாள் போர் வரை உயிரோடு இருந்தான். அம்புசன் என்ற அரக்கனோடு போர் செய்து மரணத்தைச் சந்தித்தான்.

அணி வகுத்து நிற்றல்

அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் ஆகியவரோடு அணிவகுத்துப் போர்க்களம் செல்க என மணிவண்ணனாகிய கண்ணன் படைத்தலைவனாகிய விராடன் மகன் சுவேதனிடம் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/202&oldid=1046400" இலிருந்து மீள்விக்கப்பட்டது