பக்கம்:மாபாரதம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

மாபாரதம்

அதிரதர் என்போர் தானும், வீமனும், விசயனும், அபிமன்யும் ஆவார் எனக் கண்ணன் விளக்கினான்.

மகாரதர் என்போர் தருமன், சிகண்டி, சாத்தகி, திட்டத்துய்மன் ஆவர்.

சமரதர் துருபதன், உதாமன், உத்தமபானு ஆகிய இவர் ஆவர்.

அர்த்தரதர் நகுலன், சகாதேவன், கடோற்சன் ஆகிய இவர் ஆவர்.

இந்த அடிப்படையில் படைகள் அணிவகுத்து நின்றன. ஐம்புலன்களைப் போலச் செயல்பட்டுப் பாண்டவர் ஐவரும் கண்ணனும் அணிபடைகண்டு மகிழ்வு கொண்ட னர். மருங்கு நின்ற மகிபாலன் ஆகிய பலராமன் போர் முடியும் வரை தீர்த்த யாத்திரை செய்து வருவதாகக் கூறி இந்த இரத்தக் களிரியைப் பார்க்க மனமில்லாமல் புண்ணிய ஷேத்திரத்தின் மேல் பழிபோட்டுவிட்டுப் புறப் பட்டுச் சென்றான்,

பலராமன் துரியனின் கட்சி, கண்ணன் கட்சி எதிர்க் கட்சி, அவனுக்கு வேறு வழியில்லை. தம்பியை எதிர்த்துப் போராட முடியாது. விதுரனும் பலராமன் வழியைப் பின்பற்றினான். இரண்டு பேரும் தமையனின் மைந்தர்கள். மற்றும் ஏற்கனவே வில்லை உடைத்துப் போட்டு விலகி நின்றவன். அதனால் அவன் செயல் அவனைப் பொறுத்தவரை நியாயமே ஆகும்.

மற்றவர்கள் போரில் நேரிடை பங்கு கொண்டு எதி ரெதிர் நின்று அடித்து நொறுக்கிச் சாகத் துணிந்து நின்றனர். நம்பிக்கையின் சிகரத்தில் நின்று வீரம் சிறக்க வீறு கொண்டு நின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/203&oldid=1046401" இலிருந்து மீள்விக்கப்பட்டது