பக்கம்:மாபாரதம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

மாபாரதம்


கண்ணன் வழங்கிய கீதை

களத்தில் நின்ற காண்டீபன் இளைஞரையும் தம்மிலும் வயதில் மிக்க முதியவரையும் கண்டு பாசத்தாலும் நேசத்தாலும் பிணிப்புண்டு வில்லெடுத்து அம்புதொடுக்கத் தயங்கினான். அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து செய லிழந்து நின்றது. அவன் தெளிவு பெற அரிய உரைகள் தந்து அவன் மன இருளை மாயவன் மாற்றினான்: அதையே தெய்வ நன்மொழி (பகவத் கீதை) என்பர்.

“மனம் என்பது மாயையின் படைப்பு, அது முக்குண வசத்தால் மாறக்கூடியது; வெறுப்பு விருப்பு, பந்தபாசம் இந்தத் தளைகளில் அகப்பட்டுக் கட்டுப்பட்டு விளங்குவது; மனம் அடங்கினால்தான் மெய்யறிவு உண்டாகும். உற்றார், உறவினர், செற்றார், நண்பர் என்ற பேதம் மறைந்து செயல்படமுடியும்” என்று கண்ணன் திருவாய் மலர்ந்தருளினான்.

“கடமையைச் செய்; பலனைக்கருதாதே; எதையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டுச்செயல்பட்டால் கர்த்தாவுக்கு எந்தப் பாதிப்பும் நேராது. இவன் ஒரு கருவியே தவிரக் காரணன் அல்லன். இதனையே நிஷ்காமிய கர்மம் என்று உரைப்பர்” என்றான்.

பின் கண்ணன் பேருருவில் நின்று இந்தப் பிரபஞ்சத் தையே அதில் காட்டினான். “யாதும், யாவையும் எல்லாம் யானே” என்று அறிவித்தான்.

விசுவருப தரிசனம் கண்ட விசயன் அண்ட சராசரங் களின் அடிப்படையையும் இயக்கத்தையும் அறிந்தவனாய் ஞானத் தெளிவு பெற்றுக் களத்தில் தான் ஒரு கடமை வீரன் என்ற உணர்வோடு நிமிர்ந்து நின்றான். படுகளத்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/205&oldid=1048246" இலிருந்து மீள்விக்கப்பட்டது