பக்கம்:மாபாரதம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

203

தில் ஒப்பாரி வைக்க முடியாது என்ற பாயிர உரையை அறிந்தான். பரணி பாட வேண்டிய இடத்தில் பாமாலை பாடிக் கொண்டிருக்கக்கூடாது என்பதை உணர்ந்தான்.

விடுமனையும் துரோணனனையும் சந்தித்தல்

நிதரிசன உலகத்துக்கு வந்தவர்களாய் அடுத்துச் செய்ய வேண்டிய கடும் போர் குறித்துச் சிந்தித்தனர். குருகுலத்தில் சிங்க ஏறு ஆகிய வீடுமனையும் அறிவு தந்த ஆசான் துரோணனையும் சந்தித்துப் பேசினர். “வீரமும் ஆற்றலும் மிக்க உங்களை வெல்வோம் என்ற உறுதி எங் களுககு இல்லை; நீங்கள் களத்தில் இறங்கியதும் எங்கள் உளத்தில் வெல்வோம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை” என்று பாண்டவரும் கண்ணனும் சேர்ந்து பேசினர்.

முதலில் வீடுமன் தான் முடிய வழி உள்ளது என்று கூறினான். போர் தொடங்கிய பத்தாம் நாளில் சிகண்டி அருச்சுனனோடு இருந்து அம்புகள் எய்வாள்; அம்பை என்பவள் துருபதன் மகளாகப் பிறந்திருக்கிறாள்; பிறப்பால் பெண்ணாயினும் சிறப்பால் ஆண் ஆயினள்; தன் பெண்மையை அழித்துக்கொண்டு ஆண்மையை வளர்த்துக்கொண்டு வீரனுக்கு உரிய திறனும் திடமான உரனும் பெற்றுச் சிகண்டி என்ற பெயரில் போர் வீரனாக இயங்குவாள். அந்தச் சிகண்டி களத்தில் இறங்கினால் அம்பு கொண்டு அவளைத்தாக்குவது என் ஆண்மைக்கு இழுக்கு” என்றான்.

“பெண் என்றாலே ஒதுங்கி வாழ்ந்தவன் யான்; அவளை எதிர்த்து அம்பு எய்வது என் விரதத்துக்கு இழுக்கு. என் கைப்பட்ட அம்பும் அவள் மெய்பட்டுப் பழுது படக் கூடாது. மற்றொன்று பெண் என்று தெரிந்தும் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/206&oldid=1046419" இலிருந்து மீள்விக்கப்பட்டது