பக்கம்:மாபாரதம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

205

மற்றும் அவர்களுக்குத் துணையாக சயத்ரதன், சல்லியன் மாயைகள் வல்ல சில அசுரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்; அவ்வாறே பாண்டவர் பக்கம் அருச்சுனனும் அவன் மகன் அபிமன் யுவும் செய்த போர்கள் கதைச்சிறப்பு கொண்டவை; போர் பதினெட்டு நாட்கள் நடந்தன.

தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டுகள் நடந்தன; இராம இராவணயுத்தம் பதினெட்டு மாதங்கள் நடந்தன; பாரதப்போர் பதினெட்டு நாட்களைக் கண்டது.

மகளை மணம் முடித்துத் தந்த துருபதன், அவன் மகன் திட்டத்துய்மன், புகலிடம் தந்த விராடன், அவன் மைந்தர்கள், கண்ணனின் தம்பி சாத்தகி, சோழ பாண்டியர்கள் பாண்டவர் பக்கம் நின்று போர் செய்தனர்.

கண்ணன் படை எடுக்காவிட்டாலும் போரை முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும். அவனே பாண்டவர் வெற்றிக்குத் துணையாக நின்றனன். தக்க சமயத்தில் சூழ்ச்சியும் செயல் திறனும் காட் டிப் பகைவ ரைத் தோல்வியுறச்செய்தான். துவாரகையில் இருந்த யது குல வேந்தரும் யாதவர்களும் துரியனுக்குத் துணையாக நின்றனர்.

விதுரனும், பலராமனும் ஏற்கனவே கூறியபடி இப் போர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளாமல் தீர்த்தயாத்திரை சென்று விட்டனர். அசுவத்தாமனின் படைத்தலைமை யைத் தொடக்கத்திலேயே துரியன் இழந்து விட்டான்; கன்னன் வீடுமனோடு முரண்பாடு கொண்டு ஒதுங்கி நின்றான். அவன் தலைமையில் தான் தலை காட்ட முடியாது என்று தலை மறைவாகி விட்டான். இவ் விரண்டு விலக்குகளும் துரியனுக்கு எதிர்ப்பாடுகளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/208&oldid=1046422" இலிருந்து மீள்விக்கப்பட்டது