பக்கம்:மாபாரதம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

மாபாரதம்

அமைந்தன. சல்லியன் கன்னனுக்கு எதிராகத் திரும்பிப் படுகளத்தில் அவனைத் தவிக்க விட்டான். கன்னனின் வர பலமும் உரபலமும் ஈகை என்ற பெயரால் அவ் வப்பொழுது குறைந்தன. மற்றும் அவன் பெற்ற சாபங்களும் அவன் தோல்விக்குத் துணை ஆயின.

அசுரர்கள் துரியனுக்குத் துணை நின்றனர். அவர் ளுள் குறிப்பிடத் தக்கலர்கள் பகதத்தன், அலம்புசன். பூரிசிரசு.

வீமனும் துரியனும் தொடர்ந்து போர் செய்தனர்; வீமன் விசயனுக்குத் துணையாக அமர்க்களத்தை ரணகள மாக மாற்றினான். அவன் மோதாத வீரர்கள் இல்லை என்று கூறலாம். துரியனின் தம்பியரைத் தொடர்ந்து கொன்று அழித்தான்; அவன் மகன் கடோற்சகன் மாயை கள் வல்லவன்; அவன் அவ்வப் பொழுது இடையிட்டுப் பகைவர் படைகளை நடுங்கச் செய்தான்.

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்
விராடன் மைந்தர்கள் மறைவு

முதல் நாட் போரில் வீடுமன் துரியன் படைகளுக்குத் தலைமை ஏற்றான். இரு சாராரும் நாளைக்கு ஒரு வியூகம் அமைத்துப் படைகளை அணி வகுத்தனர். போர் தொடர்கிறது. இவைபோரின் மைய நிகழ்ச்சிகளாகும்.

இம்முதல் நாட் போரில் நடந்த கள நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது உத்தரன் சல்லியனோடு தொடுத்த போராகும். விராட அரசனின் இளைய மகன் உத்தரன் என்பவன் ஆவான். வயதில் இளையவனாயினும் அவன் ஆற்றிய போர் கடுமையானது ஆகும் சல்லியனின் தேரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/209&oldid=1046424" இலிருந்து மீள்விக்கப்பட்டது