பக்கம்:மாபாரதம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

மாபாரதம்

தால் இந்தத்தடைகளை மீற முடியும் என்று நினைத்தான். நாணம் மிக்க அவள் நயமாகத் தந்தையிடம் தன் வாழ்வை முடிவு செய்ய ஒப்புவித்தாள்.

அரசன் தேர் ஒட்டியை அனுப்பித் திருமணப் பேச்சை எடுத்தான். “அந்தப்புரத்துச் சிறைக்கைதி அல்ல என் மகள்; அவள் ஆட்சியில் உரிமை பெற வேண்டும். அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தர்கள் சிம்மாசனம் ஏற வேண்டும்” என்றான்; அதற்குத்தடை மூத்தவன் இருப்பதைச் சுட்டிக்காட்டினர். பேச்சு முறிந்தது; மறுபடியும் அதைப் பற்றி மூச்சு விட முடியாமல் போய் விட்டது.

“அவள் பெயர் என்ன?”

“பரிமள கந்தி”

“குப்பை மேட்டுக்கு மேனகை நகர் என்றா பெயர்"?

“நத்தை வயிற்றில் முத்து பிறக்கும்”

“குலத் தொழில்"?

“படகு ஒட்டுதல்?”

“இப்பெயர் வரக் காரணம்?”

“முல்லை மணம் வீசும் மேனியாள் அவள்; அதனால் அவளுக்குப் பரிமளகந்தி என்று பெயர்; யோசனகத்தி என்றும் அழைப்பர்”

“பழமொழியை மாற்ற வேண்டியதுதான்”

“என்ன என்று?”

“நத்தை வயிற்றில் முத்து மணக்கும் என்று மாற்ற வேண்டும்”.

விசாரணையில் வெளி வந்த செய்திகள் இவை.

வெளியே சொன்னால் வெட்கம்; அடக்கி வைத்தால் துக்கம்; அவள் நினைவு வந்தால் ஒரே மயக்கம். பாவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/21&oldid=1239414" இலிருந்து மீள்விக்கப்பட்டது