பக்கம்:மாபாரதம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

207

குதிரையும் தனிவேறு ஆயின. தரையில் தள்ளப்பட்ட சல்லியன் தன் கைவேலினை அவன் மார்பில் பாய்ச்சி அவன் உயிரைப் போக்கினான். இளங்குருத்து நாசம் ஆகியது. தொடக்கம் துரியனுக்கு உற்சாகத்தைத் தந்தது.

உத்தரனின் தமையன் சுவேதன் விட்ட அத்திரங்கள் பகைவர்களை நடுங்கச் செய்தன; எதிரிகளின் வில்களின் நாண்கள் நாணமுற்றுச் சாய்ந்துவிட்டன. கயிறுகள் அறுப்புண்டு வளைந்த வில்களை நிமிரச் செய்தன. அவன் வில்லாற்றலுக்கு வீடுமனும் முன் நிற்க இயலவில்லை. சோர்வு வீடுமனைச் சோதனை செய்தது. அதனால் சூழ்ச்சி அவன் மூளையில் உதயமாகியது.

வில்லினால் அவனை வெல்ல முடியாது என்பதை அறிந்து சொல்லினால் ஒரு சூழ்ச்சி செய்தான்.

அவன் இளைஞன், மானத்தைத் தூண்டி விட்டால் நிதானம் இழப்பது உண்டு என்று அறிந்து செயல்பட்டான்.

“விற்போர் கற்ற நீ வாட்போர் கல்லாதது ஏன்” என்று அவன் தருக்கைக் கிள்ளி விட்டான். செருக்குற்று அவன் வில்லை வைத்து விட்டு வாளை எடுத்துக்கொண்டான். தான் வாளிலும் வல்லன் என்று தன் திறனைக் காட்டத் தொடங்கினான்.

அவன் வில் சிவன் தந்த பழைய வில்; அழிக்க முடியாதது. அதைத் துறந்து வாளோடு சென்றவன் ஆளோடு மறைந்தான். எட்டி இருந்தே அம்பு கொண்டு அவனை அலற வைத்தான். வீடுமன் நெறிதவறிய இடம் இதுவாக அமைந்தது. போர் என்றால் கத்தியைத் தீட்டுவதோடு புத்தியைத் தீட்ட வேண்டி இருந்தது. வீடுமன் வயதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/210&oldid=1046425" இலிருந்து மீள்விக்கப்பட்டது