பக்கம்:மாபாரதம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

மாபாரதம்

மூத்தவன்; சிந்தனை மிக்கவன்; வந்தவனை வலிவிழக்கச் செய்வது எப்படி என்று அறிந்தவன். அதனால் விராட னின் மூத்தமகன் தம்பி சென்ற வழி தன் வழி எனத் தன் பயணத்தைத் தொடரும்படி செய்தான்.

ஒரே நாளில் விராடன் தன் இரண்டு மைந்தர்களை இழந்தான்; புத்திர சோகம் அவன் போர் வேகத்தைத் தடை செய்தது. கண்களில் நீர் மிதக்கக் கதறி அழுதான். கண்ணனும் பாண்டவரும் பரிவு காட்டி அவன் மைந்தர் கள் பிரிவுக்காக வருத்தம் தெரிவித்தனர். முதல் நாட் போரில் பெற்ற இழப்பு அவர்கள் எழுச்சியைத் தூண்டியது. பழிவாங்கும் உணர்வு அவர்களைப் பதற வைத்தது. அடுத்த நாட் போரில் அதன் ஆவேசம் அவர்கள் செயலில் காணப்பட்டது.

விதியை மீறல்

கண்ணன் பார்த்திபனுக்குத் தேர் ஒட்டியாகத்தான் களத்தில் இறங்கினான். மூன்றாம் நாட்போரில் களத்தில் ஒரு திருப்பு நிலை ஏற்பட்டது; வீடுமன் தடுப்பார் அற்று வேகமாக முன்னேறிக் கண்ணனையும் விசயனையும் அபி மன்யுவையும் வளைத்துக் கொண்டான். மற்றவர்கள் அவரவர் நிலைக்களத்தில் எதிரிகளோடு போர் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.

மூவர் களத்தில் இருக்க முதியவன் ஒருவன் முன்னேறு வது என்றால் எப்படித் தாங்கிக் கொள்வது? வீரம் பேசும் விசயன் சோர்வு அடைந்தது ஏன்? உறவினன் என்பதால் அவன் துறவினன் ஆகிவிட்டானா? வில்லெடுத்து விளை யாட வேண்டிய அவன் முதியவனின் வீரம் கண்டு இளைத் தது ஏன்? வீடுமன் கண்ணன் யார் என்றும் பாராது அம்பு வீசி அவனைக் கிளரச் செய்ததை அவனால் தாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/211&oldid=1046426" இலிருந்து மீள்விக்கப்பட்டது