பக்கம்:மாபாரதம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

209

கொள்ள முடியவில்லை. விசயனைச் சாடட்டும்; அபிமன் யுவை அழிக்கட்டும். அவர்கள் வில்எடுத்த வீரர்கள்; அதற் காகவே துணிந்து நின்றவர்கள்.

தேர் ஒட்ட வந்தவனைத் தொட்டு விளையாடுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’ என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது. படை எடேன்” என்று சொல்லிய சொல் அவனை எளியனாகக் கருதிவிட்டது என்று எண்ணினான்.

சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சொரணை இழக்க அவன் விரும்பவில்லை; சக்கரம் ஏந்திய கையனாய்த் தேர் விட்டுக் கீழே இறங்கினான். அச்சுதன் அக்கரம் சொல்லி வீடுமன் கை தொழுது தெய்வத்தைத்தான் சீண்டி விட்ட சிறுமையை உணர்ந்தான். மானிடர் செய்யும் இப்போரில் மாலே! நீ இறங்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டான்.

“உன் சக்கரத்தால் என் தலைச் சிரம் அற்று விழுமானால் உண்மையில் நான் பேறு பெற்றவன் ஆவேன்; பிறப்பு ஒழித்துத் துறக்கம் அளிக்க வந்த தூயவனே! நான் உயர் பேறு பெறுவதற்கு உன் கரம் கறைபடுவதை நான் விரும்பவில்லை. கண்ணா, நீ பொறுத்தருள்க” என்று கேட்டுக்கொண்டான்.

பேடி கையில் இருந்த கைவாள் போல அழகு செய்து கொண்டிருந்தது காண்டீபம். அதைத்தாங்கி வந்த விசயன் கண்ணன் கமலத்திருவடிகளில் விழுந்து வணங்கினான்; வெற்றிபெறுவதில் அடையும்மகிழ்ச்சிபெரிது அல்ல; விரதம் தவறக் காரணமாக இருந்த பழிமொழியைத்தாங்கும் சக்தி எனக்கு இல்லை. படை தொடேன் என்று துரியனுக்குச்

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/212&oldid=1048248" இலிருந்து மீள்விக்கப்பட்டது