பக்கம்:மாபாரதம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசி

211

ஒன்று அன்று. அத்தகையை அசுரர்களில் ஒருவன் பகதத்தன் என்பவன் ஆவான். இவன் நரகாசுரன் மகன் ஆவான். இவன் தேவாசுரயுத்தத்தில் தேவர்களுக்குத் துணையாக நின்று தம் இனத்தவரையே மிதிபடச் செய்தவன். இவன் மண்ணரசனாக விளங்கினான். இவன் கவுரவர்களுக்கு உதவுவதாக வாக்கு அளித்து இருந்தான். நான் காம் நாட்போரில் இவன் களம் புகுந்து பாண்டவர் படைகளை எதிர்த்தான். இவனிடம் சுப்ரதீபம் என்ற யானை ஒன்று இருந்தது. வீமனும் விசயனும் அபிமன்யுவும் வேறு ஓர் பக்கம் போர் செய்து கொண்டிருந்தனர். அதனால் அந்த யானையை எதிர்ப்பவர் யாரும் இல்லை என்ற நிலைமை உருவாகி இருந்தது.

துரியனும் வீமனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப்போர் செய்து கொண்டிருந்தபோது இவன் இடையில் புகுந்தான். சுப்ரதீபம் என்ற யானையைக் கண்டு பாண்டவர் தம் யானைகள் பின் வாங்கின. மாயைகள் வல்ல அவனை எதிர்க்கக் கடோற்சகன் ஒருவனால்தான் முடிந்தது. இவனும் அரக்கி இடிம்பியின் மகன் ஆதலால் மாயைகள் பல கற்று இருந்தான். அவனை எதிர்க்க யானைப் படை ஒன்றை மாயையால் தோற்று வித்தான். அவை உண்மைப் படை என்று மோதி தத்தனின் யானை முட்டிச் சோர்வு அடைந்தது, பேய்த்தேரை உண்மைத்தேர் எனக் கண்டு அதனைத் தொடரும் கதை ஆயிற்று. கானல் நீரைப் பருகும் நீர் என்று கருதும் பயணிகளின் கதி ஆயிற்று. பகதத்தன் சோர்வு அடைந்தான்; இனி நின்று போரிடுதல் வெற்றி தராது என்று பின்வாங்கிக் கொண்டு உயிர் தப்பினான்.

பகதத்தன் பதினோராம் நாட்போரில் மீண்டும் தலை காட்டினான். சகாதேவனும் சகுனியும், துரியோதனனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/214&oldid=1046511" இலிருந்து மீள்விக்கப்பட்டது