பக்கம்:மாபாரதம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

மாபாரதம்

வீமனும், சல்லியனும் தருமனும், கன்னனும் விராடனும் போர் செய்து கொண்டிருந்தனர். அவ்வாறே துருபதனும் பகதத்தனும் கடும் போர் செய்தனர். அவர்கள் ஒரு நாள் முழுவதும் மற்போரும், விற்போரும், யானைப் போரும் செய்து வெற்றி தோல்வி இன்றி முடிவு காணாமல் அகன்றனர். அடுத்த நாட்போரில் விசயனின் அம்பால் அவன் மரணம் அடைந்தான்.

இராவானும் அம்புசனும்

வேத்திரகீயம் என்னும் நகரில் வீமனால் கொல்லப் பட்டு அழிந்த பகாசுரனது தம்பியான அம்புசன் என்பவன் எட்டாம்நாள் போரில் வீமன் மேல் சினந்து போர் செய்யக் களம் வந்தான். அவனோடு வீமன் மும்முரமாகப் போர் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது விசயனின் மகனாகிய இராவான் அவனுக்குத் துணையாகக் களத்தில் புகுந்து அம்புசனுக்குத் துணையாக வந்தவர்களை எல்லாம் துரத்தி அடித்தான். இவன் மாயப்போர் செய்யும் திறனைக்கண்டு அம்புசன் கருட வடிவம் கொண்டு அரவின் வடிவத்தில் இருந்த இராவானைச் சூழ்ந்து கொண்டான்; கருடன் முன் அரவு நிற்க முடியவில்லை. நாககன்னி உலூபியின் மகனாகிய இராவான் மரணத் தைச் சந்தித்தான். இவனே களப்பலிக்குத் தொடக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன்.

அடுத்த நாட் போரில் வீமனும் அம்புசனும் வாட் போரும் மற்போரும் செய்தனர். வீமன் அவன் வலத் தோளை வாள் கொண்டு வெட்டினான்; அதனை அடுத்து இருவரும் மற்போர் செய்தனர். விற்போரிலும் வீமன் விஞ்சியவனாக இருந்தான். இறுதியில் வேல் ஒன்றை ஏவி அவன் மார்பில் பாய்ச்சினான். இவன் மகத்தான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/215&oldid=1046512" இலிருந்து மீள்விக்கப்பட்டது