பக்கம்:மாபாரதம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

213

வெற்றியை அடைந்தான். விமனின் போர்த் திறன் இதில் முழுமையும் வெளிப்பட்டது.

விடுமன் சாய்தல்

வீடுமனே முதல் நாட் போரில் தலைமை ஏற்றான். வயதில் முதிய அவன் விதுரனைப் போலவோ பல ராம னைப் போலவே ஒதுங்கி இருக்கலாம்; உறவு என்று எடுத்துக் கொண்டால் துரியனும் அவன் தம்பியரும் எவ்வளவு நெருக்கமானவர்களோ அவ்வளவு நெருக்க மான வர்கள் பாண்டவர்கள். பிதாமகன் என்று இருவரும் அவனை மதித்தனர்.

சகுனியைப் போலச் சூழ்ச்சியோ கன்னனைப்போல வீண் ஆரவாரமோ கொண்டவன் அல்லன். அவன் குலத்து மானம் மிக்கு உடையவன். தன் வாழ்க்கையை மற்றவர் களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவன். திருதராட்டிரன் கண்ணில்லாதவன். அதனால் அவன்மீது பாசமும் பரிவும் காட்டுவது இயல்பு. மற்றும் துரியன் மாமன்னன்; அவன் இட்டதுதான் சட்டம். அவனைப் பகைத்துக் கொண்டால் தான் அங்கு வாழ முடியாது. உறவு என்பதை விட அவன் ஒரு வீரன்; வீரன் பொதுநிலை வகிக்கக் கூடாது என்ற கொள்கை உடையவன்.

கண்ணன் தெய்வப் பிறவி எனினும் அதற்காகப் போ ராட்டத்திலிருந்து விலகவில்லை. தருமம் பாண்டவர் பக்கம் இருப்பதால் தெய்வமும் அவர்கள் பக்கம் நின்று பணி செய்தது. தருமம் வெல்ல வேண்டும் என்ற கொள்கை கண்ணனின் பங்கேற்பில் அமைந்து கிடந்தது.

வீடுமன் அதருமத்துக்கு ஏன் உதவ வேண்டும்? துரியன் செய்வது தவறு என்று அறிந்தும் அவன் பக்கம் நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/216&oldid=1046513" இலிருந்து மீள்விக்கப்பட்டது